×

வெ.இண்டீசுக்கு எதிரான 2வது டெஸ்ட்: இங்கிலாந்து முதல் இன்னிங்சில் 416 ரன் குவித்து ஆல்அவுட்

நாட்டிங்காம்: வெஸ்ட்இண்டீஸ் கிரிக்கெட் அணி இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 3 போட்டி கொண்ட டெஸ்ட் தொடரில் ஆடி வருகிறது. இதில் லார்ட்சில் நடந்த முதல் டெஸ்ட்டில் இங்கிலாந்து இன்னிங்ஸ் மற்றும் 114 ரன் வித்தியாசத்தில் வெற்றி பெற்ற நிலையில் 2வது டெஸ்ட் நாட்டிங்காமில் நேற்று தொடங்கியது.

டாஸ் வென்ற வெஸ்ட்இண்டீஸ் பந்துவீச்சை தேர்வு செய்ய முதலில் பேட் செய்த இங்கிலாந்து அணியில் பென் டக்கெட் 71, ஒல்லி போப் 121, கேப்டன் பென் ஸ்டோக்ஸ் 69, கிறிஸ்வோக்ஸ் 37, ஜோரூட் 14, ஹாரி புரூக் 36 ரன் எடுத்தனர். 88.3 ஓவரில் 416 ரன்னுக்கு இங்கிலாந்து முதல் இன்னிங்சில் ஆல்அவுட் ஆனது. வெஸ்ட் இண்டீசில் பவுலிங்கில் அல்சரி ஜோசப் 3, கெவின் சின்க்ளேர், கவேம் ஹாட்ஜ், ஜெய்டன் சீல்ஸ் தலா 2 விக்கெட் வீழ்த்தினர். 2வது நாளான இன்று வெஸ்ட்இண்டீஸ் தனது முதல் இன்னிங்சை தொடங்குகிறது.

The post வெ.இண்டீசுக்கு எதிரான 2வது டெஸ்ட்: இங்கிலாந்து முதல் இன்னிங்சில் 416 ரன் குவித்து ஆல்அவுட் appeared first on Dinakaran.

Tags : Indies ,England ,Nottingham ,West Indies ,Audi ,Lord ,Dinakaran ,
× RELATED 3வது டி.20 போட்டியில் 8 விக்கெட்...