- இந்திய தொழில் கூட்டமைப்பு
- ஜனாதிபதி
- ஸ்ரீவத்ஸ் ராம்
- சென்னை
- ஜனாதிபதி
- கூட்டமைப்பு
- of
- இந்திய தொழில்
- யூனியன்
- வீல்ஸ் இந்தியா
- அலுமினியம்
- இந்தியத் தொழிற்துறையின் கூட்டமைப்பு
- தின மலர்
சென்னை: 2024 – 2025ம் நிதியாண்டிற்கான ஒன்றிய பட்ஜெட்டில் கல்வி மற்றும் மருத்துவத்திற்கு நிதி ஒதுக்கீட்டை அதிகரிக்க வேண்டும் என இந்திய தொழில் கூட்டமைப்பின் தலைவர் ஸ்ரீவத்ஸ் ராம் கோரிக்கை விடுத்துள்ளார். சென்னையை தலைமையிடமாக கொண்ட வீல்ஸ் இந்தியா நிறுவனம், அலுமினிய சக்கரம், ஹைட்ராலிக் சிலிண்டர் போன்ற கனரக வாகன உதிரிபாகங்கள் மற்றும் காற்றாலைக்கு தேவையான உதிரிபாகங்களை தயாரித்து, விற்பனை செய்து வருகிறது.
இந்நிலையில், ஒன்றிய பட்ஜெட் வரும் 23ம் தேதி தாக்கல் செய்யப்பட உள்ள நிலையில், அதன் மீதான எதிர்பார்ப்பு குறித்து, இந்திய தொழில் கூட்டமைப்பின் தமிழக தலைவர் ஸ்ரீவத்ஸ் ராம் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது கூறியதாவது; அதில், வளர்ச்சி அடைந்த நாடுகளுக்கு இணையாக இந்தியா வளர வேண்டும் எனில், கல்வி மற்றும் சுகாதாரத் துறைகளில் அதிக நிதி ஒதுக்கீடு செய்ய வேண்டும் என்று கூறினார். மேலும், கிராமப்புற மேம்பாட்டு திட்டங்களுக்கு அதிக முக்கியத்துவம் அளிப்பதும், உள்கட்டமைப்பு மேம்பாட்டு திட்டங்களுக்கு அதிக அளவில் நிதி ஒதுக்கீடு செய்வதும் அவசியம் என்றும் அவர் வலியுறுத்தியுள்ளார்.
The post 2024 பட்ஜெட்.. சுகாதாரம்,கல்விக்குக் கூடுதல் நிதி ஒதுக்க வேண்டும்: இந்திய தொழில் கூட்டமைப்பின் தலைவர் ஸ்ரீவத்ஸ் ராம் கோரிக்கை..!! appeared first on Dinakaran.