×
Saravana Stores

இணையக் குற்றங்கள் தொடர்பான விழிப்புணர்வு நிகழ்ச்சி.. ஃபெடெக்ஸ் மோசடி குறித்த குறும்படத்திற்கு முதல் பரிசு!!

சென்னை : தமிழ்நாடு காவல்துறை இணையவழி குற்றப்பிரிவு, பல்வேறு விதமான இணையக் குற்றங்கள் தொடர்பான விழிப்புணர்வு நிகழ்ச்சிகளை பள்ளிகள், கல்லூரிகள் மற்றும் பொது இடங்களில் தொடர்ந்து நடத்தி வருகிறது. இவ்வாண்டில் 285 பள்ளிகள், 272 கல்லூரிகள் மற்றும் 3157 பொது இடங்களில் விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டுள்ளன. மேலும், பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் விதமாக கூரியர்/ஃபெடெக்ஸ் மோசடி, வர்த்தகம் / முதலீட்டு மோசடி, மின்கட்டண மோசடி, டிஜிட்டல் கைது மோசடி, கல்வி உதவித் தொகை (ஸ்காலர்ஷிப்) மோசடி குறித்த சைபர்கிரைம் விழிப்புணர்வு குறும்படப் போட்டியை ஆன்லைன் முறையில் நடத்தியது.

பங்கேற்பாளர்கள் தங்களின் அசல் குறும்படத்தை கொடுக்கப்பட்ட தலைப்புக்கு இணங்கச் சமர்ப்பிக்கவும், தங்கள் படங்களை Google form ல் உள்ள இணைப்பில் 12.06.2024 முதல் 27.06.2024 வரை பதிவேற்றம் செய்யும்படி கேட்டுக்கொள்ளப்பட்டனர். இப் போட்டியில் கலந்து கொண்டவர்களின் ஃபெடெக்ஸ் மோசடி குறித்த குறும்படத்தை சமர்ப்பித்த சென்னையைச் சேர்ந்த திரு. மகேஷ்குமார் முதல் பரிசையும், ஸ்காலர்ஷிப் மோசடி குறித்த குறும்படத்தைச் சமர்ப்பித்த கிருஷ்ணகிரியைச் சேர்ந்த திரு. பேரிளம் வழுதி 2-வது பரிசையும், மின்கட்டண மோசடி குறித்த குறும்படத்தை சமர்ப்பித்த சென்னையைச் சேர்ந்த திரு.ரவி 3-வது பரிசையும் பெற்றனர். முதல் பரிசு, 2ம் பரிசு மற்றும் 3வது பரிசு பெற்றவர்களுக்கு முறையே ரூ.30,000, ரூ.20,000 மற்றும் ரூ.15,000 ரொக்கப்பரிசு கூடுதல் காவல்துறை இயக்குநர், சைபர்கிரைம் பிரிவு அவர்களால் வழங்கப்பட்டது.

The post இணையக் குற்றங்கள் தொடர்பான விழிப்புணர்வு நிகழ்ச்சி.. ஃபெடெக்ஸ் மோசடி குறித்த குறும்படத்திற்கு முதல் பரிசு!! appeared first on Dinakaran.

Tags : Fedex ,Chennai ,Tamil Nadu Police Cyber Crime Unit ,
× RELATED FedEx கூரியர் Scam மூலம் ரூ1.18 கோடி இணைய வழி மோசடி: 7 பேர் கைது