×
Saravana Stores

நீட் முறைகேடு, புதிய சட்டங்களுக்கு எதிராக மேற்கு வங்க பேரவையில் தீர்மானம்: திரிணாமுல் காங். எம்எல்ஏ தகவல்

கொல்கத்தா: நீட் தேர்வு முறைகேடுகள் மற்றும் 3 புதிய கிரிமினல் சட்டங்களுக்கு எதிராக மேற்கு வங்க பேரவையில் தீர்மானம் கொண்டு வரப்படும் என திரிணாமுல் காங்கிரஸ் எம்எல்ஏ தெரிவித்தார். மேற்கு வங்க சட்ட பேரவையின் கூட்டம் வருகிற 22ம் தேதி தொடங்குகிறது. இதில் நீட் தேர்வுகளில் நடந்த முறைகேடுகள் மற்றும் அவசரமாக அமல்படுத்தப்பட்ட 3 குற்றவியல் சட்டங்கள் குறித்த தீர்மானம் பேரவையில் தாக்கல் செய்யப்படும் என்று திரிணாமுல் காங்கிரசின் மூத்த எம்எல்ஏ ஒருவர் தெரிவித்தார்.

ஆனால், மேற்கு வங்க மாநில நாடாளுமன்ற விவகாரத்துறை அமைச்சர் சோபன்தேப் சட்டோபாத்யாய நேற்று கூறுகையில்,‘‘சட்ட பேரவை கூட்ட தொடர் 10 நாட்கள் வரை நடக்கும்’’ என்றார்.ஆனால் பேரவையில் தாக்கல் செய்யப்படும் மசோதாக்கள் மற்றும் தீர்மானங்களின் விவரங்களின் தகவல்கள் பற்றி கருத்து கூற அவர் மறுத்து விட்டார். பாஜ எம்எல்ஏ அக்னிமித்ரா பால் கூறுகையில்,‘‘ தேர்தலுக்கு பிறகு நடந்த வன்முறைகள்,கும்பல் தாக்குதல்கள் குறித்து விவாதம் நடத்த வலியுறுத்தி பேரவையில் தீர்மானம் கொண்டுவருவது பற்றி கட்சி பரிசீலனை செய்து வருகிறது’’ என்றார்.

The post நீட் முறைகேடு, புதிய சட்டங்களுக்கு எதிராக மேற்கு வங்க பேரவையில் தீர்மானம்: திரிணாமுல் காங். எம்எல்ஏ தகவல் appeared first on Dinakaran.

Tags : WEST BENGAL COUNCIL ,TRINAMUL KANG ,MLA ,Kolkata ,Trinamool Congress MLA ,West Bengal Law Council ,Trinamool Kang ,Dinakaran ,
× RELATED மதுராந்தகம் எம்எல்ஏவின் மாமனார் உடல்...