சண்டிகர்: அரியானா சட்டப்பேரவை தேர்தலில் தனித்து போட்டியிடப்போவதாக ஆம் ஆத்மி கட்சி அறிவித்துள்ளது. ஆம் ஆத்மி மூத்த தலைவர் சஞ்சய் சிங், “இன்று அரியானாவில் மிரட்டி பணம் பறிக்கும் தொழில் நடந்து வருகிறது. வேலையில்லா திண்டாட்டம் அதிகரித்து, சட்டம், ஒழுங்கு மோசமடைந்துள்ளது.
அரியானாவில் காங்கிரஸ், பாஜ மற்றும் மாநில கட்சிகள் ஆட்சி செய்துள்ளன. ஆனால் அவை அனைத்தும் மாநிலத்தை சூறையாடின. வரும் சட்டப்பேரவை தேர்தலில் 90 தொகுதிகளிலும் ஆம் ஆத்மி தனித்து போட்டியிட்டு வெற்றி பெறும்” என்று இவ்வாறு தெரிவித்தார்.
The post அரியானா பேரவை தேர்தலில் ஆம் ஆத்மி தனித்து போட்டி appeared first on Dinakaran.