×
Saravana Stores

சொந்த நிலத்திற்கு பட்டா கேட்டு 82 வயது முதியவர் கலெக்டரிடம் மனு

நாமக்கல், ஜூலை 19: நாமக்கல் மாவட்டம், வளையப்பட்டியை சேர்ந்தவர் பெரியசாமிபிள்ளை (82). இவர் நாமக்கல் கலெக்டர் உமாவை நேரில் சந்தித்து, அளித்துள்ள கோரிக்கை மனுவில் கூறியிருப்பதாவது: மோகனூர் தாலுகா வளையப்பட்டியில், எனக்கு சொந்தமான நிலம் உள்ளது. இதற்கு பட்டா கேட்டு மனு செய்தேன். கடந்த 2014ம் ஆண்டு நிலத்தணிகை மற்றும் விசாரணை செய்ய, மாவட்ட கலெக்டரால் உத்தரவிடப்பட்டது. இது தொடர்பாக தொடரப்பட்ட வழக்கில், சென்னை உயர்நீதிமன்றம் எனக்கு சாதமாக தீர்ப்பு வழங்கி உள்ளது. இது சம்பந்தமாக மோகனூர் தாசில்தாரை அணுகி கேட்டபோது, பட்டா கிடைக்க எந்தந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. எனக்கு தற்போது 82வயது ஆகிவிட்டது. என் ஆயுட்காலத்திற்குள் எனது நிலத்திற்கு பட்டா வழங்க வேண்டும். எனவே, கலெக்டர் இதில் தலையிட்டு, சென்னை உயர்நீதிமன்ற உத்தரவுப்படி எனது நிலத்திற்கு பட்டா வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு மனுவில் கூறப்பட்டுள்ளது.

The post சொந்த நிலத்திற்கு பட்டா கேட்டு 82 வயது முதியவர் கலெக்டரிடம் மனு appeared first on Dinakaran.

Tags : Namakkal ,Periyasamipillai ,Krangpatti, Namakkal district ,Namakkal Collector ,Uma ,Mohanur taluk Prangpatti ,
× RELATED மாணவ, மாணவியரின் பாதுகாப்புக்காக...