- மகளிர் டி20 ஆசிய கோப்பை
- இலங்கை
- தம்புல்லா
- 9வது ஆசிய கோப்பை மகளிர் டி20 கிரிக்கெட்
- பெண்கள் ஆசியா கோப்பை
- தின மலர்
தம்புல்லா: ஆசி நாடுகளுக்கு இடையிலான 9வது ஆசிய கோப்பை பெண்கள் டி20 கிரிக்கெட் போட்டி இன்று இலங்கையில் தொடங்குகிறது. பெண்கள் ஆசிய கோப்பை முதலில் ஒருநாள் ஆட்டங்கள் கொண்ட போட்டியாக 2004ம் ஆண்டு தொடங்கப்பட்டது தொடர்ந்து 4 கோப்பைகளுக்கு பிறகு 2012ம் ஆண்டு முதல் டி20 ஆட்டங்கள் கொண்டதாக ஆசிய கோப்பை நடத்தப் படுகிறது. இது வரை நடந்த 8 ஆசிய கோப்பைகளில் 7 முறை சாம்பியன் பட்டம் வென்று ஆசிய கோப்பை வரலாற்றில் ஆசிய அரசியாக இந்திய பெண்கள் அணி திகழ்கிறது.
இப்போது 9வது ஆசிய கோப்பையில் நடப்பு சாம்பியன் இந்தியா உட்பட 8 அணிகள் பங்கேற்கின்றன. இவை தலா 4 அணிகளை கொண்ட 2 பிரிவுகளாக களம் காணுகின்றன. ஒவ்வொரு அணியும் தங்கள் பிரிவில் உள்ள அணிகளுடன் தலா ஒரு முறை மோதும். ஒவ்வொரு பிரிவிலும் முதல் 2 இடங்களை பிடிக்கும் அணிகள் அரையிறுதி ஆட்டங்களில் விளையாடும். லீக் சுற்று ஆட்டங்கள் இன்று முதல் ஜூலை 24ம் தேதி வரையிலும், அரையிறுதி ஆட்டங்கள் ஜூலை 26ம் தேதியும் நடக்கும். இறுதி ஆட்டம் ஜூலை 28ம்தேதி இரவு நடத்தப்படும். எல்லா ஆட்டங்களும் தம்புல்லாவில் மட்டுமே நடக்க இருக்கின்றன.
இதுவரை சாம்பியன்கள்
வரிசை களம் ஆண்டு வகை சாம்பியன் 2வது இடம்
1 இலங்கை 2004 ஒருநாள் இந்தியா இலங்கை
2 பாகிஸ்தான் 2005-06 ஒருநாள் இந்தியா இலங்கை
3 இந்தியா 2006 ஒருநாள் இந்தியா இலங்கை
4 இலங்கை 2008 ஒருநாள் இந்தியா இலங்கை
5 சீனா 2012 டி20 இந்தியா பாகிஸ்தான்
6 தாய்லாந்து 2016 டி20 இந்தியா பாகிஸ்தான்
7 மலேசியா 2018 டி20 வங்கதேசம் இந்தியா
8 வங்கதேசம் 2022 டி20 இந்தியா இலங்கை
* இந்திய அணி
ஹர்மன்பிரீத் (கேப்டன்), ரிச்சா, உமா (விக்கெட் கீப்பர்கள்), மந்தனா (துணைக் கேப்டன்), ஹேமலதா தயாளன் (தமிழ்நாடு), ஷபாலி, தீப்தி, பூஜா, அருந்ததி, ஜெமீமா, ரேணுகா, ஆஷா ஷோபனா, ராதா, ஸ்ரேயாங்கா, சஜனா சஜீவன்
The post இலங்கையில் இன்று முதல் பெண்கள் டி20 ஆசிய கோப்பை appeared first on Dinakaran.