×
Saravana Stores

மணத்தக்காளி வற்றல்

தேவையானவை:

மணத்தக்காளி காய் – கால் கிலோ,
தண்ணீர் – அரை லிட்டர்,
உப்பு – 2 தேக்கரண்டி.

செய்முறை:

தண்ணீரை நன்கு கொதிக்க வைத்து, அடுப்பில் இருந்து இறக்கி உப்பு, மணத்தக்காளி சேர்த்து மூடி வைக்கவும். 10-15 நிமிடங்களுக்குப் பிறகு, நீரை நன்றாக வடிகட்டவும். மணத்தக்காளி காயை, ஒரு வாரம் வரை வெயிலில் காயவிடவும். ஈரமில்லாமல் நன்கு காய்ந்தவுடன், காற்றுப்புகாத டப்பாவில் அடைத்து, தேவைப்படும்போது உபயோகப்படுத்தவும். மணத்தக்காளி வற்றலை வதக்கிப் பயன்
படுத்தி குழம்பு வைத்தால், சுவையும், மணமும் அள்ளும். இதை நெய்யில் வதக்கி, மிக்ஸியில் பொடி செய்து சூடான சாதத்தில் சேர்த்து, எண்ணெய் சிறிது விட்டு பிசைந்து சாப்பிடலாம். இந்த வற்றலை வாரம் ஓரிரு முறை சேர்த்துக்கொண்டால், வயிற்றுக்கு நல்லது. இது, கர்ப்பப்பையில் புண் வராமல் தடுக்கும்.

The post மணத்தக்காளி வற்றல் appeared first on Dinakaran.

Tags : Kai ,
× RELATED அரவக்குறிச்சியில் முருங்கைகாய் விலை சரிவு