×

திருப்பூர் நொய்யல் ஆற்றில் ஏற்பட்டுள்ள வெள்ளப் பெருக்கால் நல்லம்மன் தடுப்பணையில் வெள்ளம்: நல்லம்மன் கோவிலுக்கு செல்லும் சிறு பாலம் மூழ்கியது

திருப்பூர்: திருப்பூர் நொய்யல் ஆற்றில் ஏற்பட்டுள்ள வெள்ளப் பெருக்கால் நல்லம்மன் தடுப்பணையில் வெள்ளம் அதிகரித்து நல்லம்மன் கோவிலுக்கு செல்லும் சிறு பாலம் மூழ்கி கோவிலுக்கு செல்ல முடியாத நிலை ஏற்பட்டு உள்ளது.

திருப்பூர் அடுத்த மங்கலம் அருகே நொய்யல் ஆற்றில் நல்லம்மன் தடுப்பணை உள்ளது. சுமார் 1000 ஆண்டுகளுக்கு முன்னர் கொங்கு சோழர்களால் கட்டப்பட்ட இந்த அணைக்காக நல்லம்மாள் என்ற சிறுமி உயிர்த்தியாகம் செய்ததால் நல்லம்மனுக்கு அணை நடுவில் கோவில் கட்டி வழிபாடு நடத்தப்பட்டு வருகிறது. இந்த நிலையில் மேற்கு தொடர்ச்சி மலை பகுதிகளில் கடந்த சில நாட்களாக நல்ல மழை பெய்து வருகிறது. இதனால் நொய்யல் ஆற்றில் புது வெள்ளம் வருகிறது.

மங்கலம் அருகே உள்ள நல்லம்மன் தடுப்பணையில் புது வெள்ளம் வரும் நிலையில் அணைக்கு நடுவே உள்ள கோவிலுக்கு செல்லும் சிறு பாலம் ஆற்று நீரில் மூழ்கி விட்டது. இதனால் நல்லம்மன் கோவிலுக்கு செல்ல முடியாத நிலை ஏற்பட்டு உள்ளது. மேலும் கோவிலுக்குள்ளும் வெள்ளம் புகுந்துள்ளது. இன்னும் நீரின் அளவு அதிகமானால் கோவில் மூழ்கும் நிலை ஏற்பட்டு உள்ளது. வெள்ளம் காரணமாக, நல்லம்மன் கோவிலுக்கு பொதுமக்கள் செல்வதற்கு போலீசார் தடை விதித்துள்ளனர்.

The post திருப்பூர் நொய்யல் ஆற்றில் ஏற்பட்டுள்ள வெள்ளப் பெருக்கால் நல்லம்மன் தடுப்பணையில் வெள்ளம்: நல்லம்மன் கோவிலுக்கு செல்லும் சிறு பாலம் மூழ்கியது appeared first on Dinakaran.

Tags : Nallamman barrage ,Tirupur Noyal river ,Nallamman temple ,Tirupur ,Noyal river ,Nallamman ,Mangalam, Tirupur ,Noyal River, ,Dinakaran ,
× RELATED திருப்பூர் நொய்யல் ஆற்றில் ஏற்பட்ட...