×

மொகரம் பண்டிகையொட்டி சர்வ மத ரொட்டி திருவிழா

திருமலை: ஆந்திராவில் மொகரம் பண்டிகையொட்டி சர்வ மதத்தினர் கொண்டாடும் ரொட்டி திருவிழா இன்று தொடங்கியது. ஆந்திர மாநிலம் நெல்லூரில் உள்ள தர்காவில் ஒவ்வொரு ஆண்டும் மொகரம் பண்டிகையொட்டி ரொட்டி திருவிழா நடத்தப்படுகிறது. இந்த திருவிழாவில் அனைத்து மதத்தினரும் பங்கேற்று சிறப்பு செய்கின்றனர். மொகரம் பண்டிகையன்று புனித நீராடி தர்காவுக்கு சென்று வழிபாடு நடத்தி பின்னர் அங்கு பிரசாதமாக வழங்கப்படும் ரொட்டிகளை வாங்கி சாப்பிடுகின்றனர். குறிப்பாக தங்கள் வேண்டுதல் நிறைவேறிய மகிழ்ச்சியில் பலர் ரொட்டிகளை கொண்டுவந்து வழங்குவர்.

இன்று மொகரம் பண்டிகையொட்டி அதிகாலை முதல் பல்வேறு பகுதிகளை சேர்ந்த இஸ்லாமியர்கள் உள்ளிட்ட அனைத்து மதத்தினரும் ஏரியில் குளித்து தர்காவில் வழிபாடு நடத்த நீண்டவரிசையில் காத்திருந்தனர். பிரார்த்தனை முடித்து திரும்பியவர்களுக்கு ரொட்டிகளை தானமாக வழங்கினர். இன்று தொடங்கிய இந்த விழா தொடர்ந்து 5 நாட்கள் நடக்க உள்ளது. வேண்டுதல் நிறைவேறிய மகிழ்ச்சியில் பல்வேறு பகுதிகளை சேர்ந்த ஏராளமான இஸ்லாமியர்கள் உள்ளிட்ட அனைத்து மதத்தினரும் ரொட்டிகளை கொண்டு வந்தனர். அவற்றை தர்கா நிர்வாகத்திடம் கொடுத்து அனைவருக்கும் வழங்கினர். முதல்நாளான இன்று ஆயிரக்கணக்கான ரொட்டிகளை ஏராளமானோருக்கு பிரசாதமாக வழங்கப்பட்டது. இவற்றை பெறுவதற்காக நீண்டவரிசையில் ஏராளமானோர் பக்தர்கள் காத்திருந்தனர்.

The post மொகரம் பண்டிகையொட்டி சர்வ மத ரொட்டி திருவிழா appeared first on Dinakaran.

Tags : Interfaith Roti Festival ,Mogaram festival ,Tirumala ,Andhra ,Dharga ,Nellore, Andhra Pradesh ,
× RELATED திருமலை திருப்பதி தேவஸ்தானத்தில்...