×
Saravana Stores

ஒன்றிய கல்வித்துறை அமைச்சர் தர்மேந்திர பிரதானுடன் ஆளுநர் ஆர்.என்.ரவி திடீர் சந்திப்பு..!!

டெல்லி: டெல்லியில் ஒன்றிய கல்வித்துறை அமைச்சர் தர்மேந்திர பிரதானை தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி சந்தித்தார். அரசு முறை பயணமாக தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவி நேற்று முன்தினம் சென்னையில் இருந்து டெல்லிக்கு புறப்பட்டுச் சென்றார். டெல்லி சென்றுள்ள ஆளுநர் வரும் ஜூலை 19ம் தேதி மாலை சென்னைக்கு திரும்ப உள்ளார். 5 நாட்கள் பயணமாக டெல்லி சென்றுள்ள ஆளுநர் ஆர்.என்.ரவி, நேற்று பிரதமரை சந்தித்துப் பேசினார். மேலும், பிரதமராக மீண்டும் மோடி பொறுப்பேற்றதற்கும் ஆளுநர் வாழ்த்து தெரிவித்தார்.

இந்நிலையில், இன்று மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதானை தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவி சந்தித்துப் பேசினார். நீட் தேர்வு எதிர்ப்பு குறித்து விவாதித்ததாக தகவல் வெளியாகியுள்ளது. தமிழ்நாட்டில் உயர்கல்வியை உயர்ந்த நிலைக்கு கொண்டு செல்வதற்கான வழிகள் மற்றும் முறைகள் பற்றி விவாதித்ததாக ஆளுநர் தனது எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளார். நீட் விலக்கு மசோதா குடியரசு தலைவரின் ஒப்புதலுக்காக அனுப்பப்பட்டு, நிலுவையில் உள்ளது குறிப்பிடத்தக்கது.

The post ஒன்றிய கல்வித்துறை அமைச்சர் தர்மேந்திர பிரதானுடன் ஆளுநர் ஆர்.என்.ரவி திடீர் சந்திப்பு..!! appeared first on Dinakaran.

Tags : Governor RN ,Ravi ,Union Education Minister ,Dharmendra Pradhan ,Delhi ,Tamil Nadu ,Chennai ,governor ,
× RELATED ஆளுநர் ரவி கூறுவது வடிகட்டிய பொய்: முத்தரசன் விமர்சனம்