×
Saravana Stores

ஏர் இந்தியா நிறுவனத்தில் அறிவிக்கப்பட்ட 600 பணியிடங்களுக்கு 25,000க்கும் மேற்பட்டோர் திரண்டதால் தள்ளுமுள்ளு

மும்பை: ஏர் இந்தியா நிறுவனத்தில் அறிவிக்கப்பட்ட 600 பணியிடங்களுக்கு 25,000க்கும் மேற்பட்டோர் திரண்டதால் தள்ளுமுள்ளு ஏற்பட்டது. விமானத்தில் சரக்குகளை ஏற்றி, இறக்கும் வேலைக்காக ஆயிரக்கணக்கான பட்டதாரிகள் விண்ணப்பத்துடன் வந்துள்ளனர். கூட்டத்தை கட்டுப்படுத்த முடியாமல் திணறிய ஏர் இந்தியா ஊழியர்கள் அவர்களிடம் Resume-ஐ பெற்றுக்கொண்டு திருப்பி அனுப்பியுள்ளனர். சமீபத்தில் குஜராத்தின் அங்கலேஷ்வரில் 10 பணியிடங்களுக்கு 1,800 பேர் விண்ணப்பிக்க முண்டியடித்த நிலையில், தற்போது அதேபோல் மீண்டும் ஒரு சம்பவம் அரங்கேறியுள்ளது.

The post ஏர் இந்தியா நிறுவனத்தில் அறிவிக்கப்பட்ட 600 பணியிடங்களுக்கு 25,000க்கும் மேற்பட்டோர் திரண்டதால் தள்ளுமுள்ளு appeared first on Dinakaran.

Tags : Air India ,MUMBAI ,Dinakaran ,
× RELATED குறிப்பிட்ட சில வழித்தடங்களில்...