- உயர் கல்வித் துறை
- முதல் அமைச்சர்
- சென்னை
- மு.கே ஸ்டாலின்
- புதுக்கோட்டை மாவட்டம்
- ஆலங்குடி அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி
சென்னை: உயர்கல்வித் துறை சார்பில் ரூ.52.75 கோடியில் கட்டப்பட்டுள்ள கல்விசார் கட்டிடங்களை முதல்வர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார். தற்காலிக கட்டிடங்களில் இயங்கி வந்த புதுக்கோட்டை மாவட்டம், ஆலங்குடி அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிக்கு ரூ.12 கோடியே 40 லட்சம் செலவிலும், திருமயம் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிக்கு ரூ.12 கோடியே 46 லட்சம் செலவிலும் கட்டப்பட்டுள்ள கல்லூரிக்கான புதிய கட்டிடங்கள், நாமக்கல் மாவட்டம், சேந்தமங்கலம் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் ரூ.3 கோடியே 52 லட்சம் செலவில் கட்டப்பட்டுள்ள 8 ஆய்வகக் கட்டிடங்கள், கோயம்புத்தூர், அரசு மகளிர் பலவகை தொழில்நுட்பக் கல்லூரியில் ரூ.9 கோடியே 43 லட்சம் செலவில் கட்டப்பட்டுள்ள 15 வகுப்பறைகள் மற்றும் 10 ஆய்வகக் கட்டிடங்கள் என மொத்தம் ரூ.52 கோடியே 75 லட்சம் செலவில் கட்டப்பட்டுள்ள உயர்கல்வித்துறை கட்டிடங்களை காணொலி காட்சி வாயிலாக முதல்வர் மு.க.ஸ்டாலின் நேற்று திறந்து வைத்தார். இந்நிகழ்ச்சியில், அமைச்சர் பொன்முடி, தலைமைச் செயலாளர் சிவ் தாஸ் மீனாமற்றும் அரசு உயர் அதிகாரிகள் கலந்து கொண்டனர்.
The post உயர்கல்வித்துறை சார்பில் ரூ.52.75 கோடியில் கல்விசார் கட்டிடங்கள் முதல்வர் திறந்து வைத்தார் appeared first on Dinakaran.