×

மொஹரத்தை முன்னிட்டு சனிக்கிழமை அட்டவணையில் இன்று மெட்ரோ ரயில் இயக்கம்

சென்னை: மொஹரம் பண்டிகையை முன்னிட்டு இன்று சனிக்கிழமை அட்டவணைப்படி மெட்ரோ ரயில்கள் இயக்கப்படும் என மெட்ரோ நிர்வாகம் தெரிவித்துள்ளது. அதன்படி நெரிசல் மிகுந்த நேரமான காலை 8 மணி முதல் 11 மணி வரையிலும், மாலை 5 மணி முதல் இரவு 8 மணி வரையிலும் 6 நிமிட இடைவெளியில் மெட்ரோ ரயில்கள் இயக்கப்படும்.

அதேபோல் அதிகாலை 5 மணி முதல் காலை 8 மணி வரையிலும், காலை 11 மணி முதல் மாலை 5 மணி வரையிலும் 7 நிமிட இடைவெளியில் ரயில்கள் இயக்கப்படும் என சென்னை மெட்ரோ நிர்வாகம் தெரிவித்துள்ளது.

 

The post மொஹரத்தை முன்னிட்டு சனிக்கிழமை அட்டவணையில் இன்று மெட்ரோ ரயில் இயக்கம் appeared first on Dinakaran.

Tags : Muharram ,CHENNAI ,Moharram festival ,Moharram ,
× RELATED சென்னை மெரினாவில் உள்ள நீச்சல்...