×
Saravana Stores

உத்திரமேரூர் அருகே நகை திருடர்கள் 2 பேர் கைது: 20 சவரன் பறிமுதல்

உத்திரமேரூர்: உத்திரமேரூர் அருகே தொடர் நகை திருட்டில் ஈடுபட்ட 2 பேரை கைது செய்து, அவர்களிடமிருந்து 20 சவரன் நகைகளை, போலீசார் பறிமுதல் செய்தனர். உத்திரமேரூர் அடுத்த அம்மையப்பநல்லூர் கிராமத்தில் நேற்று முன்தினம் இரவு உத்திரமேரூர் போலீசார் வாகன தணிக்கையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது, அவ்வழியாக பைக்கில் வந்த 2 மர்ம நபரை, போலீசார் மடக்கி பிடித்து விசாரித்தபோது, அவர்கள் முன்னுக்குபின் முரணாக பதிலளித்துள்ளனர்.

இதனால், சந்தேகமடைந்த போலீசார், 2 பேரையும் கைது செய்து உத்திரமேரூர் காவல் நிலையத்திற்கு அழைத்து வந்த நடத்திய விசாரணையில், மலையாங்குளம் கிராமத்தை சேர்ந்த பிரசாந்த் (27) மற்றும் ரிஷி (23) என்பதும், இவர்கள் உத்திரமேரூர் சுற்று வட்டாரப்பகுதிகளில் தொடர் நகை திருட்டில் ஈடுபட்டதும் தெரியவந்தது. மேலும், அவர்களிடமிருந்து 20 சவரன் தங்க நகையை பறிமுதல் செய்த போலீசார், அவர்களை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

The post உத்திரமேரூர் அருகே நகை திருடர்கள் 2 பேர் கைது: 20 சவரன் பறிமுதல் appeared first on Dinakaran.

Tags : Uttaramerur ,Uttara Merur ,Uttaramerur police ,Ammaiyappanallur ,Uttaramerur.… ,Dinakaran ,
× RELATED உத்திரமேரூரில் ஆக்கிரமிப்பின்...