×

பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி மாற்றுத்திறனாளிகள் முற்றுகை போராட்டம்

செங்கல்பட்டு: செங்கல்பட்டு மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி மாற்றுத்திறனாளிகள் முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டனர். அதில், அனைத்து நலவாரிய பணிகளுக்கும் தொழிற்சங்க சான்று கட்டாயமாக்க வேண்டும், மனு அளித்த 30 நாட்களில் அனைத்து பணப்பயன்களையும் வழங்க வேண்டும், மக்களையும் பாதிக்கும் மோட்டர் வாகன சட்டத்தை வாபஸ் பெற வேண்டும். சாலையோர வியாபாரிகள் சட்டம் 2014ஐ பற்றி அனைத்து அரசு அதிகாரிகளுக்கும் தெளிவுபடுத்த வேண்டும்.

சாலையோர வியாபாரிகள் விற்பனை குழு அமைக்க விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும். அனைத்து அமைப்புசாரை தொழிலாளர்களின் ஓய்வூதியத்தை ரூ.3000மாக உயர்த்த வேண்டும். பணப்பயன் கிடைப்பதற்கான ஆன்லைன் நடைமுறைகளை எளிதாக்க வேண்டும். கட்டுமானம், தையல், ஆட்டோ தொழிலாளர் நல வாரிய கூட்ட பரிந்துரைப்படி ஓய்வூதியத்தை 60 வயது பூர்த்தியான நாள் முதல் வழங்கிட வேண்டும்.

நலவாரியத்தில் பதிவு செய்த பெண் தொழிலாளிகளுக்கு 55 வயதில் ஓய்வூதியம் வழங்க வேண்டும். ஓய்வூதியம் பெற்று வரும் தொழிலாளி மரணமடைந்தால் இயற்கை மரண ஈமச்சடங்கு நிதி வழங்க வேண்டும். நேரடியாக கொடுத்து நிலுவையில் உள்ள மனுக்களை பரிசீலித்து பணப்பயன்களை வழங்க வேண்டும். அனைத்து அமைப்புசாரா தொழிலாளர்களின் குழந்தைகளுக்கு 1ம் வகுப்பு முதல் கல்வி நிதி வழங்க வேண்டும், என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டனர்.

மேலும், மாவட்ட நிர்வாகத்தை கண்டித்து கோஷமிட்டனர். இதனால் கலெக்டர் அலுவலக வளாகத்தில் பரபரப்பு ஏற்பட்டது. இதேபோல், சிஐடியூ சார்பில் செங்கல்பட்டு மாவட்ட கலெக்டர் அலுவலகம் அருகே இதே கோரிக்கைகளை வலியுறுத்தி நேற்று ஆர்ப்பாட்டம் நடந்தது. மாவட்ட தலைவர் சேஷாத்திரி தலைமை தாங்கினார். மாவட்ட செயலாளர் பகத்சிங்தாஸ் முன்னிலை வகித்தார். இதில், 100க்கும் மேற்பட்டோர் கலந்துகொண்டனர்.

The post பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி மாற்றுத்திறனாளிகள் முற்றுகை போராட்டம் appeared first on Dinakaran.

Tags : Chengalpattu ,
× RELATED செங்கல்பட்டு மாவட்டத்தில் வீடுவீடாக...