×

நீலகிரியில் கனமழை எச்சரிக்கை: பொதுமக்களுக்கு மாவட்ட நிர்வாகம் அறிவுறுத்தல்

நீலகிரி: நீலகிரியில் கனமழை பெய்து வருவதால் ஆற்றங்கரையோரங்களில் வசிக்கும் மக்கள் எச்சரிக்கையாக இருக்க மாவட்ட நிர்வாகம் அறிவுறுத்தியுள்ளது. கூடலூர், பந்தலூர், தேவாலா, நாடுகாணி, சேரம்பாடி, தொரப்பள்ளி, முதுமலை உள்ளிட்ட இடங்களில் கனமழை பெய்து வருகிறது. கூடலூர் மற்றும் அதன் சுற்றுவட்டார இடங்களில் இடைவிடாது கனமழை பெய்து வருவதால் ஆறுகள், ஓடைகளில் மழைநீர் பெருக்கெடுத்து ஓடுவதால் கரையோர மக்களுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. தாழ்வான இடங்களில் வீடுகளை மழை நீர் சூழந்துள்ளதால் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது.

The post நீலகிரியில் கனமழை எச்சரிக்கை: பொதுமக்களுக்கு மாவட்ட நிர்வாகம் அறிவுறுத்தல் appeared first on Dinakaran.

Tags : Nilgiris ,Gudalur ,Bandalur ,Dewala ,Nadugani ,Serambadi ,Thorapalli ,Mudumalai ,Kudalur ,Dinakaran ,
× RELATED ‘போர் அடிச்சுது… பஸ்ச கடத்தி ஓட்டி...