×

காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் பெய்து வரும் கனமழையால் மேட்டூர் அணைக்கான நீர்வரத்து 16,577 கனஅடியாக உயர்வு

சேலம்: மேட்டூர் அணைக்கு வரும் நீரின் அளவு வினாடிக்கு 5,054 கன அடியில் இருந்து 16,577 கன அடியாக உயர்ந்துள்ளது. காலை 8 மணிக்கு 5,054 கன அடி நீர் வந்து கொண்டிருந்த நிலையில் தற்போது 18,577 கன அடியாக அதிகரித்துள்ளது. மேட்டூர் அணையின் நீர்மட்டம் 44.62 அடியாக சற்று உயர்ந்துள்ளது. அணையின் நீர் இருப்பு 14.592 டி.எம்.சி.யாக உள்ளது.

காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் பெய்து வரும் கனமழை காரணமாக கர்நாடகாவில் உள்ள அணைகள் முழு கொள்ளளவை எட்டக்கூடிய சூழ்நிலையில் நேற்று முன்தினம் வினாடிக்கு 20ஆயிரம் கன அடி வீதம் தண்ணீர் திறக்கப்பட்டது. இந்த நீரானது ஒகேனக்கல் பகுதிக்கு நேற்று மாலை முதல் வர தொடங்கியது. நேற்று இரவு 15ஆயிரம் கனஅடியாக அதிகரித்து, இன்று காலை ஒகேனக்கல் பகுதிக்கு நீர்வரத்து 20ஆயிரம் கனஅடியாக அதிகரித்தது.

இந்நிலையில் நீர்வரத்து சேலம் மாவட்டத்தில் உள்ள மேட்டூர் அணைக்கு வர தொடங்கியுள்ளது. இன்று காலை நிலவரப்படி மேட்டூர் அணையிலிருந்து நீர்வரத்து வினாடிக்கு 5,054 கன அடியில் இருந்து 16,577 கன அடியாக உயர்ந்துள்ளது. பல மாதங்களாக மேட்டூர் அணைக்கான நீர்வரத்து தொடர்ந்து சரிந்து காணப்பட்டது. கடந்த 3ம் தேதி முதல் மேட்டூர் அணையின் நீர்மட்டம் கொஞ்சம் கொஞ்சமாக உயர தொடங்கியது.

கடந்த 3ம் தேதி 39.65அடியாக இருந்த அணையின் நீர்மட்டம் தற்போது உயர தொடங்கியது. இந்நிலையில் இன்று மாலை நிலவரப்படி 18,577 கன அடியாக அதிகரித்துள்ளது. மேட்டூர் அணையின் நீர்மட்டம் 44.62 அடியாக சற்று உயர்ந்துள்ளது.

அணையின் நீர் இருப்பு 14.592 டி.எம்.சி.யாக உள்ளது. அணையிலிருந்து குடிநீர் தேவைக்காக வினாடிக்கு 1,000 கனஅடி தண்ணீர் வெளியேற்றப்பட்டு வருகிறது. கர்நாடக அணைகளில் உபரிநீர் வெளியேற்றப்பட்டு வருவதால் மேட்டூர் அணைக்கு மேலும் நீர்வரத்து அதிகரிக்கும் என அதிகாரிகள் தகவல் தெரிவித்துள்ளனர்.

The post காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் பெய்து வரும் கனமழையால் மேட்டூர் அணைக்கான நீர்வரத்து 16,577 கனஅடியாக உயர்வு appeared first on Dinakaran.

Tags : Cauvery ,Mettur dam ,Salem ,Dinakaran ,
× RELATED மேட்டூர் அணைக்கு நீர்வரத்து அதிகரிப்பு