×

ஸ்கேட்டிங் போட்டியில் கோவை மாணவி அசத்தல்

 

கோவை, ஜூலை 16: பெலேண்டர்ஸ் கிராண்ட் பிக்ஸ் என்ற சர்வதேச ஸ்கேட்டிங் போட்டி பெல்ஜியம் நாட்டில் நடைபெற்றது. இந்த போட்டியில் இந்தியா, நெதெர்லாந்து, பெல்ஜியம், பிரான்ஷ், டென்மார்க், இத்தாலி, ஸ்பெயின், ஜெர்மனி உள்ளிட்ட பல்வேறு நாட்டில் இருந்து மொத்தம் 600 போட்டியாளர்கள் கலந்து கொண்டனர். இதில் கோவை மாவட்டம் சரவணம்பட்டி பகுதியை சேர்ந்த 3ம் வகுப்பு மாணவி மேஹா (9) இந்தியா சார்பாக பங்கேற்றார்.

இவர் இந்த போட்டியில் 800 மீ, 1000 மீ மற்றும் 2000 மீ பிரிவில் தலா ஒரு தங்கம் என மொத்தம் 3 தங்கப்பதக்கங்ளை வென்றார். அதேபோல 800 மீ பிரிவில் ஒரு வெள்ளியும், 1600 மீ பிரிவில் 2 வெள்ளியும் என மொத்தம் 3 வெள்ளிப்பதக்கங்களை வென்றார். இந்த போட்டியில் நடைபெற்ற அனைத்து சுற்றுகளிலும் சிறப்பாக செயல்பட்டதால் ‘ஓவர் ஆல் சாம்பியன்ஷிப்’பில் மேஹா 2வது இடம் பிடித்தார்.
இது குறித்து மேஹாவின் பயிற்சியாளர் ராகுல் பாண்டியன் கூறியதாவது: பெலேண்டர்ஸ் கிராண்ட் பிக்ஸ் போட்டிகள் 40 வருடத்திற்கு மேலாக நடைபெற்று வருகிறது. மற்ற ஸ்கேட்டிங் போட்டிகளைப்போல இந்த போட்டிகள் கிடையாது.

இது மிகவும் கடினம். இதில் நடைபெறும் 6 சுற்றுகளிலும் போட்டியாளர் கண்டிப்பாக முதல் மூன்று இடங்களை பிடிக்க வேண்டும். அதன் அடிப்படையில்தான் பதக்கங்கள் தீர்மானிக்கப்படும். அதன்படி மேஹா, அனைத்து சுற்றுகளிலும் சிறப்பாக விளையாடி 3 தங்கம், 3 வெள்ளி மற்றும் ‘ஓவர் ஆல் சாம்பியன்ஷிப்’பில் 2வது இடம் பிடித்துள்ளார். இந்த பெலேண்டர்ஸ் போட்டியில் கோவை மாவட்டத்தை சேர்ந்த ஸ்கேட்டிங் வீரர் பதக்கங்களை வெல்வது இதுவே முதல் முறை. இவ்வாறு அவர் கூறினார்.

The post ஸ்கேட்டிங் போட்டியில் கோவை மாணவி அசத்தல் appeared first on Dinakaran.

Tags : Coimbatore ,Grand Prix ,Belgium ,India ,Netherlands ,France ,Denmark ,Italy ,Spain ,Germany ,
× RELATED தொழிற்சாலைகளுக்கு ‘பீக் ஹவர்’...