×
Saravana Stores

மக்களவை காங். நிர்வாகிகள் நியமனம்

புதுடெல்லி: மக்களவை காங்கிரஸ் கட்சி நிர்வாகிகள் நேற்று நியமிக்கப்பட்டனர். கவுரவ் கோகாய் மக்களவை காங்கிரஸ் துணைத் தலைவராக நியமிக்கப்பட்டுள்ளார். தலைமை கொறடாவாக கேரள எம்பி கொடிக்குன்னில் சுரேஷும், கொறடாக்களாக விருதுநகர் எம்.பி மாணிக்கம் தாகூர் மற்றும் கிஷன்கஞ்ச் எம்.பி முகமது ஜாவேத் ஆகியோர் செயல்படுவார்கள். இந்த நியமனங்கள் குறித்து காங்கிரஸ் நாடாளுமன்ற கட்சித் தலைவர் சோனியா காந்தி மக்களவைசபாநாயகர் ஓம் பிர்லாவுக்கு கடிதம் அனுப்பியுள்ளார்.

The post மக்களவை காங். நிர்வாகிகள் நியமனம் appeared first on Dinakaran.

Tags : Lok Sabha Congress ,New Delhi ,Gaurav Gogai ,Congress ,Vice President ,Lok Sabha ,Kerala ,Kodikunnil Suresh ,chief whip ,Virudhunagar ,Manikam Tagore ,Kishanganj ,Mohammad Javed ,Dinakaran ,
× RELATED மதுஆலை உற்பத்தி கொள்கை மாநில...