×

பீகாரின் புத்தகயாவில் உள்ள மகாபோதி கோயிலுக்கடியில் புதைந்திருக்கும் ‘பொக்கிஷம்’: செயற்கைகோள் படங்கள் மூலம் கண்டுபிடிப்பு

பாட்னா: பீகாரின் புத்தகயாவில் உள்ள மகாபோதி கோயிலுக்கு அடியில் கட்டிடக்கலையின் மகத்தான பொக்கிஷங்கள் புதைந்திருப்பதாக செயற்கைகோள் புகைப்படங்கள் மூலம் தெரியவந்துள்ளது. புத்தர் அமர்ந்து தியானம் செய்து ஞானம் பெற்றதாக கூறப்படும் போதி மரம், பீகாரின் புத்தகயாவில் உள்ளது. இங்கு மகாபோதி கோயில் கட்டப்பட்டுள்ளது. இந்த இடம் யுனெஸ்கோவின் உலக பாரம்பரிய சின்னமாக அங்கீகரிக்கப்பட்டுள்ளது.

மகாபோதி கோயிலின் அடியில் கட்டிடக்கலை மேலும் பல பொக்கிஷங்கள் புதைந்திருப்பதாக இங்கிலாந்தின் கார்டிப் பல்கலைக்கழகத்துடன் இணைந்து மாநில கலை, கலாச்சாரம் மற்றும் இளைஞர் துறையை சேர்ந்த பீகார் பாரம்பரிய மேம்பாட்டு சங்கம் மேற்கொண்ட ஆய்வில் தெரியவந்துள்ளது. சீன துறவி சுவான்சாங்க்கின் குறிப்புகளையும், பழங்கால செயற்கைகோள் புகைப்படங்களையும் வைத்து ஆய்வு செய்ததில், மகாபோதி கோயிலின் அடியில் பல தொல்லியல் கட்டிடங்கள் புதைந்திருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

The post பீகாரின் புத்தகயாவில் உள்ள மகாபோதி கோயிலுக்கடியில் புதைந்திருக்கும் ‘பொக்கிஷம்’: செயற்கைகோள் படங்கள் மூலம் கண்டுபிடிப்பு appeared first on Dinakaran.

Tags : Mahabodhi ,Bihar's Bodhgaya ,Mahabodhi temple ,Buddha ,Bodhgaya, Bihar ,
× RELATED உ.பி.யில் எக்ஸ்பிரஸ் ரயில்கள் மீது கல்வீச்சு