×

நேபாளத்தில் கனமழை, நிலச்சரிவில் சிக்கி 66 பேர் பலி

காத்மண்டு: நேபாளத்தில் மழையினால் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கு, நிலச்சரிவில் சிக்கி 66 பேர் பலியாகி உள்ளனர். நேபாளத்தில் பல்வேறு பகுதிகளில் நேற்று முன்தினம் காலை முதல் தொடர்ந்து கனமழை பெய்து வருகின்றது. இதன் காரணமாக திடீரென வெள்ளப்பெருக்கு ஏற்படும் அபாயம் உள்ளதாக பேரிடர் அதிகாரிகள் எச்சரித்தனர்.

இந்நிலையில் காத்மண்டுவில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. ேமலும் பல இடங்களில் நிலச்சரிவு ஏற்பட்டது. இந்த வௌ்ளம் மற்றும் நிலச்சரிவில் சிக்கி 66 பேர் பலியாகி விட்டனர். 40 பேரை காணவில்லை. மேலும் 226 வீடுகள் வெள்ளத்தில் மூழ்கின. பாதிக்கப்பட்ட பகுதிகளில் சுமார் 3000 பாதுகாப்பு படை வீரர்கள் அடங்கிய குழு மீட்பு பணிகளில் ஈடுபட்டுள்ளது. அவர்கள் 1000 பேரை பத்திரமாக மீட்டுள்ளனர். பெரு வெள்ளம் காரணமாக நாடு முழுவதும் 44 இடங்களில் போக்குவரத்து துண்டிக்கப்பட்டுள்ளது. மின்தடை அமல்படுத்தப்பட்டுள்ளது.

The post நேபாளத்தில் கனமழை, நிலச்சரிவில் சிக்கி 66 பேர் பலி appeared first on Dinakaran.

Tags : Nepal ,Kathmandu ,Dinakaran ,
× RELATED மாயமான மாணவ, மாணவி தடாகத்தில் சடலமாக மிதந்தனர்: கேரளாவில் பரபரப்பு