- காரைக்கால் மகளிர் தொழில்நுட்பக் கல்லூரி
- காரைக்கால்
- உள் தர உத்தரவாதத் துறை
- காரைக்கால் ஐசிஇ அகாடமி
- காரைக்கால் மகளிர் தொழில்நுட்பக் கல்லூரி
- தின மலர்
காரைக்கால்,ஜூலை 13: காரைக்கால் மகளிர் தொழில்நுட்பக் கல்லூரியின் முதலாம் ஆண்டு உள் தர உறுதிப் பிரிவு முதலாம் ஆண்டு மாணவிகளுக்கு \”கூகுள் மேப்\” என்ற தலைப்பில் விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக காரைக்கால் ஐசிஇ அகாடமி இயக்குனர் ரமேஷ் மோகன் கலந்து கொண்டு, வருங்காலத்தில் மாணவிகள் தங்கள் வாழ்வியல் இலக்கை அடைவதற்கு தமது வாழ்வில் கூகுள் மேப் போல பலவிதமான பாதைகள் இருந்தாலும் சரியான பாதையை தேர்ந்தெடுக்க வேண்டும் என்ற விழிப்புணர்வுவை மாணவிகளுக்கு ஏற்படுத்தினார்.
மாணவிகள் மிகுந்த உற்சாகத்துடனும்,ஆர்வத்துடனும் பங்குபெற்றனர்.நிகழ்ச்சிக்கு கல்லூரியின் முதல்வர் முனைவர் சந்தானசாமி தலைமை வகித்து வாழ்வில் சாதித்து காட்டிய வெற்றியாளர்களின் வாழ்கை வரலாறுகளைப் பகிர்ந்து அதன் மூலம் ஊக்கம் மற்றும் நேர்மறையான சிந்தனையின் அவசியத்தை வலியுறுத்தினார். மேலும் இந்நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை கல்லூரிஆசிரியர் ராஜபாலன் மற்றும் கல்லூரி விரிவுரையாளர்கள் சிறப்பாக செய்து இருந்தனர்.
The post காரைக்கால் மகளிர் தொழில்நுட்பக் கல்லூரியில் கூகுள் மேப் தலைப்பில் விழிப்புணர்வு நிகழ்ச்சி appeared first on Dinakaran.