- கோவில்பத்து கோதண்டராமர் கோவில்
- காரைக்கால்
- கோவில்பத்து கோதண்டராமர் கோவில்
- கும்பாபிஷேக பந்தகல்
- அமைச்சர்
- திருமுருகன்
- கோவில்பட்டு திருதெளிச்சேரி
- ஸ்ரீ சுயம்வர தபஸ்வினி
- ஸ்ரீ பார்வதீஸ்வரர் தேவஸ்தானம்
- கோவில்பத்து கோதண்டராமர்
காரைக்கால்,ஜூலை 13: காரைக்கால் அருகே உள்ள கோவில்பத்து கோதண்டராமர் கோயில் கும்பாபிஷேக பந்தக்கால் நடும் நிகழ்ச்சி நடந்தது. இதில் அமைச்சர் திருமுருகன் கலந்து கொண்டார். காரைக்கால் அடுத்த கோவில்பத்து திருத்தெளிச்சேரி ஸ்ரீ சுயம்வர தபஸ்வினி சமேத ஸ்ரீ பார்வதீஸ்வரர் தேவஸ்தானத்திற்கு உட்பட்ட ஸ்ரீ கோதண்டராமர் கோயில் கும்பாபிஷேகத்தினை முன்னிட்டு பந்தக்கால் நடும் நிகழ்ச்சி நேற்று நடைபெற்றது.
இந்நிகழ்ச்சியில் புதுச்சேரி அமைச்சர் திருமுருகன் கலந்து கொண்டு தலைமை வகித்து பந்தக்கால் முகூர்த்தம் நிகழ்ச்சியை நடத்தினார். இந்நிகழ்ச்சியில் கோயில்கள் நிர்வாக அதிகாரி அருணகிரிநாதன், ஆலய பட்டாச்சாரியார்கள், விழா குழுவினர், ஊர் முக்கியஸ்தர்கள் மற்றும் பக்தர்கள் கலந்து கொண்டனர்.
The post காரைக்கால் அருகே உள்ள கோவில்பத்து கோதண்டராமர் கோயில் கும்பாபிஷேக பந்தக்கால் நடும் நிகழ்ச்சி appeared first on Dinakaran.