- சிறப்பு கிராம சபைக் கூட்டம்
- தொண்டு திட்டம்
- ராஜபாலியம்
- இராஜபாலியம் உராதச்சி யூனியன்
- கிருஷ்ணாபுரம்
- பெருந்தலைவர் கம்ராஜ் செகண்டரி பள்ளி
- சமூக தணிக்கை
- கிருஷாபுரம் பெருந்தலைவர் காமராஜ் செகண்டரி பள்ளி
- நித்யா விஜயகுமார்
- தொண்டு திட்டம் தொடர்பான சிறப்பு கிராம சபை கூட்டம்
- தின மலர்
ராஜபாளையம், ஜூலை 13: ராஜபாளையம் ஊராட்சி ஒன்றியம் கிருஷ்ணாபுரம் பெருந்தலைவர் காமராஜ் மேல்நிலைப் பள்ளியில் சத்துணவுத் திட்டம் தொடர்பான சமூக தணிக்கை சிறப்பு கிராம சபை கூட்டம் ஊராட்சி மன்ற தலைவர் நித்யா விஜயகுமார் தலைமையிலும் மாவட்ட சமூக தணிக்கை அலுவலர் சின்னச்சாமி முன்னிலையிலும் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் சத்துணவுத் திட்டத்தின் செயல்பாடுகள், உணவு வழங்கும் விதம், உணவின் தரம் குறித்து வட்டார வள பயிற்றுநர் ரமேஷ் தலைமையிலான குழுவினர் தணிக்கை மேற்கொண்டனர்.
மாணவ, மாணவிகள், பெற்றோர் ஆசிரியர் கழகத்தினரிடம் சத்துணவுத் திட்டம் குறித்து நிறை குறைகள், திட்டத்தை மேம்படுத்த ஆலோசனைகள் பெறப்பட்டு தணிக்கை செய்யப்பட்டது. இக்கூட்டத்தில் பெற்றோர்கள், மாணவ மாணவிகள், பள்ளி நிர்வாகிகள், ஆசிரியர்கள், அமைப்பாளர் கலந்து கொண்டனர். முடிவில் தலைமை ஆசிரியை அமுதா நன்றி கூறினார்.
The post சத்துணவுத்திட்டம் குறித்த சிறப்பு கிராம சபை கூட்டம் appeared first on Dinakaran.