- அழகப்பா பல்கலைக்கழகம்
- காரைக்குடி
- அழகப்பா பல்கலைக்கழகம் ஸ்வச்பாரத் ஸ்வஸ்பாரத் மையம்
- பல்கலைக்கழக சமூக வானொலி
- ரோட்டரி முத்து சங்கம்
காரைக்குடி, ஜூலை 13: காரைக்குடி அழகப்பா பல்கலைக்கழக சுவச்பாரத் சுவாஸ்பாரத் மையம் மற்றும் பல்கலைக்கழக சமுதாய வானொலி, ரோட்டரி பியர்ல் சங்கத்துடன் இணைந்து கழிவு அகற்றம் மேலாண்மை திட்டத்தின் மூலம் பல்கலைக்கழக வளாகத்தை சுத்தம் செய்யும் முகாம் நடந்தது. ஒருங்கிணைப்பாளர் விநாயகமூர்த்தி வரவேற்றார். தேர்வுகட்டுப்பாட்டு அதிகாரி முனைவர் ஜோதிபாசு முன்னிலை வகித்தார்.
திட்டத்தை துவக்கிவைத்து துணைவேந்தர் ஜி.ரவி பேசுகையில், அழகப்பா பல்கலைக்கழகம் சார்பில் சுற்றுச்சூழலை காக்க பல்வேறு முன்மாதிரி திட்டங்களை முன்னெடுத்து செயல்படுத்தி வருகிறது. இதன் ஒருபகுதியாக பிளாஸ்டிக்கு எதிரான போர் என்ற திட்டம் துவங்கப்பட்டு பல்கலைக்கழக வளாகம் முழுவதும் பிளாஸ்டிக் இல்லாத நிலை உருவாக்கப்பட உள்ளது.
கழிவுநீரை மறுசுழற்சி செய்து அதில் ஹைட்ரஜன் வாயுவை பிரித்து எடுத்து ஆற்றல் எனர்ஜியாக பயன்படுத்த ஏற்பாடுகளை செய்து வருகிறோம். தவிர சுத்திகரிப்பட்ட கழிவுநீரை தாவரங்களுக்கு பயன்படுத்தி வருகிறோம், என்றார். நிகழ்ச்சியில் சமுதாய வானொலி இயக்குநர் சுமதி, ரோட்டரி பிளர்ல் காரைமுத்துக்குமார், பொறியாளர் சிவசுப்பிரமணியன் உள்பட பலர் கலந்து கொண்டனர். இணை ஒருங்கிணைப்பாளர் குமார் நன்றி கூறினார்.
The post அழகப்பா பல்கலை.,யில் பிளாஸ்டிக்கிற்கு எதிரான போர் திட்டம் துவக்கம்: துணைவேந்தர் தகவல் appeared first on Dinakaran.