×
Saravana Stores

போலி ஆவணம் மூலம் புதுச்சேரியில் கார் பதிவு ஒன்றிய அமைச்சர் சுரேஷ் கோபி கேரள உயர்நீதிமன்றத்தில் சீராய்வு மனு

திருவனந்தபுரம்: பிரபல மலையாள நடிகரும், ஒன்றிய இணையமைச்சருமான சுரேஷ் கோபி கடந்த 2010ம் ஆண்டு ஒரு சொகுசு கார் வாங்கினார். அதை புதுச்சேரியில் பதிவு செய்து கேரளாவில் பயன்படுத்தி வந்தார். இந்நிலையில் சுரேஷ் கோபி புதுச்சேரியில் போலி ஆவணம் மூலம் காரை பதிவு செய்து உள்ளதாகவும், இதன் மூலம் கேரள அரசுக்கு ரூ.3,60,300 நஷ்டம் ஏற்பட்டுள்ளதாகவும் கூறி குற்றப்பிரிவு போலீசார் வழக்கு பதிவு செய்தனர். இந்த வழக்கை ரத்து செய்ய எர்ணாகுளம் தலைமை குற்றவியல் மாஜிஸ்திரேட் நீதிமன்றம் மறுத்துவிட்டது. இதை எதிர்த்து ஒன்றிய இணையமைச்சர் சுரேஷ் கோபி கேரள உயர் நீதிமன்றத்தில் சீராய்வு மனு தாக்கல் செய்துள்ளார்.

The post போலி ஆவணம் மூலம் புதுச்சேரியில் கார் பதிவு ஒன்றிய அமைச்சர் சுரேஷ் கோபி கேரள உயர்நீதிமன்றத்தில் சீராய்வு மனு appeared first on Dinakaran.

Tags : Union Minister of Car Registration ,Suresh Gobi ,Kerala High Court ,Puducherry ,Thiruvananthapuram ,Union ,Minister ,Kerala ,Suresh Kobi ,Dinakaran ,
× RELATED மனித உரிமை ஆணையத் தலைவர்...