- தமிழ்நாடு: உச்ச நீதிமன்றம்
- கர்நாடக
- முதல் அமைச்சர்
- சித்தராமையா
- பெங்களூரு
- காவிரி மேலாண்மை ஆணையம்
- காவிரி
பெங்களூரு: தமிழகத்துக்கு தினமும் 1 டிஎம்சி தண்ணீரை காவிரியில் கர்நாடகா திறந்து விட வேண்டும் என்று ஒழுங்காற்றுக் குழு காவிரி மேலாண்மை ஆணையத்துக்கு பரிந்துரை செய்துள்ளது. இதையடுத்து பெங்களூருவில் முதல்வர் சித்தராமையா தலைமையில் ஆலோசனை கூட்டம் நேற்று நடந்தது.இதில் துணை முதல்வர் டி.கே.சிவகுமார், அமைச்சர்கள், அதிகாரிகள் உள்ளிட்டோர் பங்கேற்றனர். இக்கூட்டத்திற்கு பிறகு நிருபர்களிடம் முதல்வர் சித்தராமையா கூறியதாவது:
தினந்தோறும் 1 டிஎம்சி தண்ணீர் திறந்து விட வேண்டும் என்ற பரிந்துரையை எதிர்த்து காவிரி மேலாண்மை ஆணையத்திடம் முறையீடு செய்வதற்கு முடிவு செய்யப்பட்டுள்ளது. இதையொட்டி கர்நாடக அணைகளின் நீர் இருப்பு, வெளியேற்றம் உள்ளிட்ட விபரங்கள் ஆராயப்பட்டது. கர்நாடகாவில் இம்முறை பருவமழை சராசரியையொட்டி இருக்கும் என வானிலை முன்னறிவிப்பு இருந்தாலும், தற்போது வரை 28 சதவீதம் பற்றாக்குறை உள்ளது. காவிரி விவகாரம் தொடர்பாக ஜூலை 14ம் தேதி(நாளை) மாலை 4 மணிக்கு அனைத்து கட்சி கூட்டம் நடைபெறுகிறது, என்றார்.
The post தமிழகத்துக்கு தண்ணீர் திறக்கும் பரிந்துரையை எதிர்த்து முறையீடு: நாளை அனைத்து கட்சி கூட்டம், கர்நாடக முதல்வர் சித்தராமையா திட்டவட்டம் appeared first on Dinakaran.