×
Saravana Stores

சிறையில் இருக்கும் எம்பியின் தம்பி கைது

சண்டிகர்: பஞ்சாபின் காதூர் சாகிப் தொகுதியின் எம்பி அம்ரித்பால் சிங் தேசிய பாதுகாப்பு சட்டத்தின் கீழ் அசாமின் திப்ருகர் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். இவர் சிறையில் இருந்து தான் மக்களவை தேர்தலில் போட்டியிட்டு வெற்றி பெற்றார். 4 நாள் பரோலில் டெல்லி சென்ற அம்ரீத் பால் எம்பியாக பதவியேற்றார்.

இந்நிலையில் இவரது சகோதரர் ஹர்பிரீத் சிங்கை ஜலந்தர் போலீசார் கைது செய்துள்ளனர். நேற்று முன்தினம் ஹர்பிரீத் சென்ற காரை போலீசார் சோதனை செய்தபோது காரில் 4 கிராம் போதைப்பொருள் கண்டறியப்பட்டுள்ளது. இதனை தொடர்ந்து காரில் இருந்த ஹர்பிரீத் உட்பட இரண்டு பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

The post சிறையில் இருக்கும் எம்பியின் தம்பி கைது appeared first on Dinakaran.

Tags : Chandigarh ,Punjab ,Kadur Sahib ,Amritpal Singh ,Assam ,Dibrugarh ,Lok Sabha ,Delhi ,Dinakaran ,
× RELATED பாக். எல்லை அருகே சீன டிரோன் கண்டெடுப்பு