- அரசு மருத்துவ கிடங்கு
- கரப்பேட்டை, காஞ்சிபுரம்
- காஞ்சிபுரம்
- கலிச்செல்வி மோகன்
- மருத்துவக் கிடங்கு
- கரபெட்டா
- தமிழ்
- நாடு அரசு மருத்துவக் கிடங்கு
- கரப்பெட்டா
- மருத்துவ கிடங்கு மாவட்டம்
- காஞ்சிபுரம் கரப்பேட்டை
காஞ்சிபுரம், ஜூலை 13: காஞ்சிபுரம் அருகே காரப்பேட்டையில் உள்ள அரசு மருத்துவ கிடங்கினை கலெக்டர் கலைச்செல்வி மோகன் நேரில் ஆய்வு செய்தார். காஞ்சிபுரம் அருகே காரப்பேட்டையில் தமிழ்நாடு அரசு மருத்துவ கிடங்கு உள்ளது. இந்த, மருத்துவ கிடங்கினை மாவட்ட கலெக்டர் கலைச்செல்வி மோகன் நேற்று நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார். அப்போது, கிடங்கில் குளிர்சாதன பெட்டியில் வைக்கப்பட்டுள்ள பாம்பு கடி, நாய் கடி மருந்துகள் மற்றும் தடுப்பூசிகளை பார்வையிட்டு, அதன் இருப்புகள் குறித்து கேட்டறிந்தார். பின்னர், அத்தியாவசிய மருந்துகள், கேன்சர் மருந்துகள் இருப்பு பற்றிய பதிவேடுகளை ஆய்வு செய்தார்.
தொடர்ந்து வாலாஜாபாத் ஒன்றியம், காரை ஊராட்சியில் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதி திட்டத்தின் கீழ், ₹10 லட்சம் மதிப்பீட்டில் புதிய குளம் வெட்டும் பணியினை கலெக்டர் கலைச்செல்வி மோகன் பார்வையிட்டு, ஊராட்சியிலுள்ள பாலிடெக்னிக் கல்லூரி பிற்படுத்தப்பட்டோர் மாணவர்களுக்கான விடுதியினை ஆய்வு செய்தார்.ஆய்வின்போது, அண்ணா புற்றுநோய் மருத்துவமனை இயக்குநர் சரவணன், இணை இயக்குநர் (மருத்துவப்பணிகள்) செந்தில்குமார், துணை இயக்குநர் (சுகாதாரப்பணிகள்) செந்தில், பொதுப்பணித்துறை செயற்பொறியாளர் சிவசண்முகசுந்தரம், மாவட்ட மருந்தாளுனர் பழனிவேலன் மற்றும் அரசு அலுவலர்கள் உடனிருந்தனர்.
The post காஞ்சிபுரம் காரப்பேட்டையில் அரசு மருத்துவ கிடங்கில் கலெக்டர் ஆய்வு appeared first on Dinakaran.