×
Saravana Stores

‘மக்களுடன் முதல்வர்’ திட்டத்தில் பெறப்படும்; 00 சிறப்பு முகாம்கள் நடத்த ஏற்பாடு : கலெக்டர் தகவல்

தஞ்சாவூர், ஜூலை 12: முதல்வரின் நேரடி கண்காணிப்பில் மக்களுடன் முதல்வர் திட்டம் தொடங்கிவைக்கப்பட்டது. தமிழ்நாடு முதலமைச்சர் தருமபுரி மாவட்டத்தில் மக்களுடன் முதல்வர் திட்டத்தை தொடங்கி வைத்ததைத் தொடர்ந்து, தஞ்சாவூர் மாவட்டம், மொன்னையம்பட்டி புனித அந்தோணியார் அரசு உதவி பெறும் தொடக்கப் பள்ளியில் ஊரகப் பகுதிகளில் மக்களுடன் முதல்வர் திட்டத்தில் அரசு தலைமைக் கொறடா கோவி.செழியன் மாவட்ட ஆட்சித்தலைவர் தீபக்ஜேக்கப் தலைமை வகித்தார், ந்நிகழ்ச்சியில் மாநிலங்களவை உறுப்பினர் கல்யாணசுந்தரம், சட்டமன்ற உறுப்பினர்கள் துரை சந்திரசேகரன், டி.கே.ஜி.நீலமேகம், அன்பழகன், அண்ணாதுரை, அசோக்குமார், தஞ்சாவூர் மாநகராட்சி மேயர் சண் ராமநாதன் முன்னிலை வகித்தனர்.

மிழ்நாடு முதலமைச்சர் தருமபுரி மாவட்டத்தில் மக்களுடன் முதல்வர் திட்டத்தை ஊரகப் பகுதிகளுக்கும் விரிவுப்படுத்தி 12,500 கிராம ஊராட்சிகளில் 2500 முகாம்களின் மூலம் 15 அரசுத்துறைகளின் வாயிலாக 44 சேவைகள் வழங்கும் திட்டத்தை தொடங்கவைத்தார். தைத்தொடர்ந்து தஞ்சாவூர் வட்டத்திற்கு உட்பட்ட மொன்னையம்பட்டி அரசு உதவி பெறும் புனித அந்தோணியார் தொடக்கப்பள்ளியில் மக்களுடன்முதல்வர் திட்ட முகாம் நேற்று நடைபெற்றது. இதில் மாநகராட்சிகள், நகராட்சிகள், பேரூராட்சிகள், நகர்ப்புறங்களை ஒட்டியுள்ள கிராம ஊராட்சிகளில் செயல்படுத்த சிறப்பு முகாம்களை தமிழ்நாடு முதலமைச்சர் கடந்த 18.12.2023ல் கோயம்புத்தூர் மாவட்டம், ஆவாரம்பாளையத்தில் தொடங்கிவைத்தனர். க்களுடன் முதல்வர் என்ற இப்புதிய திட்டத்தின் கீழ் 13 அரசுத்துறைகள் சார்ந்த கோரிக்கைகளை பெற்று தீர்வு காண்பதற்கு முதலமைச்சர் நேரடி கண்காணிப்பில், அனைத்து நகர்ப்புறங்களிலும் சிறப்பு முகாம்கள் நடத்தப்படுகிறது.

ஊரகப்பகுதிகளில் மக்கள் பயன் பெறும் வகையில் மக்களுடன்முதல்வர் திட்டத்தின் கீழ் பொதுமக்கள் அதிகளவில் அணுகும் அரசுத்துறைகளான, வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைதுறை, ஊரகவளர்ச்சி மற்றும் ஊராட்சிகள்துறை, எரிசக்தித்துறை, வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சித்துறை, காவல்துறை, குறு, சிறு மற்றும் நடுத்தரத் தொழில் நிறுவனங்கள்துறை, ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை, பிற்படுத்தப்பட்டோர் மிகப்பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர்நலத்துறை, சமூகநலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை, மாற்றுத்திறனாளிகள் நலத்துறை, தொழிலாளர் நலன் மற்றும் திறன் மேம்பாடுத்துறை, வேளாண்மை-உழவர்நலத்துறை, கால்நடை பராமரிப்பு, பால்வளம், மீன்வளம் மற்றும் மீனவர் நலத்துறை, கூட்டுறவுத்துறை, மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை ஆகிய 15 துறைகள் சார்ந்த கோரிக்கைகளைப் பெற்று 30 தினங்களுக்குள் தீர்வு காணும் வகையில் முதலமைச்சர் நேரடிக் கண்காணிப்பில் அனைத்து மாவட்டங்களிலும் சுமார் 2,500 சிறப்பு முகாம்கள் நடத்தப்படுகிறது.

தஞ்சாவூர் மாவட்டத்திலுள்ள ஊராட்சிகளை ஒருங்கிணைத்து 15.07.2024 முதல் தொடர்ச்சியாக மக்களுடன் முதல்வர் திட்டம் ஊரகப்பகுதிகளில் நடத்த உத்தேசிக்கப்பட்டுள்ளது. மக்களுடன் முதல்வர் முகாமில் பெறப்படும் அனைத்து மனுக்களும் சம்பந்தப்பட்ட துறைகளால் பரிசீலனை செய்யப்பட்டு தகுதியின் அடிப்படையில் உரிய சேவைகள் 30 நாட்களில் மக்களுக்கு வழங்கப்படும் என மாவட்ட ஆட்சித் தலைவர் தீபக்ஜேக்கப் தெரிவித்தார்.
மேலும், அரசு தலைமை கொறடா கோவி.செழியன், மாவட்ட ஆட்சித் தலைவர் தீபக்ஜேக்கப்நேற்று நடைபெற்ற மக்களுடன் முதல்வர் முகாமில் பொதுமக்களிடம் இருந்து கோரிக்கை மனுக்களை பெற்று மனுக்களை பதிவு செய்து சிறப்பு முகாமினை பார்வையிட்டு பதிவு செய்ய வந்த மக்களிடம் கோரிக்கைகள் குறித்து விவரங்களை கேட்டறிந்தததைத்தொடர்ந்து, முதலமைச்சரின் விரிவாக மருத்துவகாப்பீடு திட்டத்தின் கீழ் பயனாளிகளுக்கு காப்பீட்டிற்கான அட்டைகளை வழங்கினார்.

The post ‘மக்களுடன் முதல்வர்’ திட்டத்தில் பெறப்படும்; 00 சிறப்பு முகாம்கள் நடத்த ஏற்பாடு : கலெக்டர் தகவல் appeared first on Dinakaran.

Tags : Thanjavur ,Chief Minister ,Tamil ,Nadu ,Dharmapuri District ,St. Anthony Government Aided Primary School ,District ,Monnaiambatti… ,Dinakaran ,
× RELATED தொடர் வெற்றிகள் சிலருக்கு எரிச்சலை...