×
Saravana Stores

கடையின் பூட்டை உடைத்து செல்போன் கொள்ளை


கும்மிடிப்பூண்டி: கும்மிடிப்பூண்டி அடுத்த புதுகும்மிடிப்பூண்டி பகுதியை சேர்ந்த காளிதாஸ்(36). கும்மிடிப்பூண்டி பைபாஸ் சாலையில் செல்போன் கடை நடத்தி வருகிறார். இவர், நேற்று முன்தினம் வழக்கம்போல் கடையை திறப்பதற்காக சென்றுள்ளார்.அப்போது, கடையின் கதவு உடைக்கப்பட்டிருப்பதை கண்டு அதிர்ச்சியடைந்த காளிதாஸ், இதுகுறித்து சிப்காட் காவல் நிலையத்திற்கு தகவல் தெரிவித்தார். அதன்பேரில், சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற போலீசார், கடையின் உள்ளே சென்று பார்த்தபோது ₹1 லட்சம் மதிப்புள்ள 6 செல்போன்கள் கொள்ளை போனது தெரியவந்தது.

அதேபோல், கும்மிடிப்பூண்டி பைபாஸ் சாலையில் உள்ள டீக்கடையிலும் பூட்டை உடைத்து கொள்ளை சம்பவத்தில் ஈடுபட முயன்றதும் தெரியவந்தது. அதன்படி, 2 கடையை உடைத்து கொள்ளையடிக்கப்பட்ட சம்பவம் குறித்து, சிப்காட் போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். மேலும், அப்பகுதியில் உள்ள சிசிடிவி கேமரா பதிவுகளை ஆய்வு செய்து, கொள்ளையர்களை தேடி வருகின்றனர்.

The post கடையின் பூட்டை உடைத்து செல்போன் கொள்ளை appeared first on Dinakaran.

Tags : Kummidipundi ,Kalitas ,Budukummidipundi ,Bypass Road ,Chipcat Police ,Dinakaran ,
× RELATED சிந்தலகுப்பம் பகுதியில் லாரி கவிழ்ந்து போக்குவரத்து பாதிப்பு