×
Saravana Stores

இந்திய யோகா அணிக்கு கடையநல்லூர் பள்ளி மாணவர் தேர்வு

கடையநல்லூர், ஜூலை 12: உலக யோகா தினத்தை முன்னிட்டு மும்பை நோவோடெல்லில் யோகா சங்கமும், இந்திய ஹத யோகா பெடரேசனும் இணைந்து சர்வதேச யோகா போட்டியும், இந்திய யோகா அணி தேர்வு போட்டியும் நடந்தது. இதில் லயன்ஸ் மகாத்மா மெட்ரிகுலேசன் பள்ளி 6ம் வகுப்பு மாணவன் சவுமித்ரன், 9 முதல் 11 வயது பிரிவிற்கான போட்டியில் இரண்டாம் பரிசு பெற்று இந்திய யோகா அணிக்கு தேர்வு செய்யப்பட்டுள்ளார். வெற்றி பெற்ற மாணவர் சவுமித்ரனையும், பயிற்சி அளித்த பயிற்சியாளர் காளிப்பாண்டியையும், பள்ளியின் தாளாளர் அண்ணாதுரை, செயலாளர் சண்முகசுந்தரம், பொருளாளர் மாரியப்பன், பள்ளி முதல்வர் ராஜராஜேஸ்வரி ஆகியோர் பாராட்டி பரிசு வழங்கினர். மேலும் டிசம்பரில் சவூதி அரேபியாவில் நடைபெறும் 6வது உலக யோகா போட்டியிலும் கலந்து கொள்ள தேர்வு செய்யப்பட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

The post இந்திய யோகா அணிக்கு கடையநல்லூர் பள்ளி மாணவர் தேர்வு appeared first on Dinakaran.

Tags : Kadayanallur ,Indian Yoga ,World Yoga Day ,International Yoga Competition ,Team ,Novotel ,Mumbai ,Yoga Association ,Hatha Yoga Federation of India ,Lions Mahatma Matriculation School ,Kadayanallur School ,Indian Yoga Team ,Dinakaran ,
× RELATED கடையநல்லூர் அருகே ரயிலில் அடிபட்டு ஒருவர் பலி