×
Saravana Stores

கடையநல்லூர் அருகே ரயிலில் அடிபட்டு ஒருவர் பலி

கடையநல்லூர்,அக்.18: கடையநல்லூர் அருகே இடைகாலில் ரயிலில் அடிபட்டு ஒருவர் பலியானார். தென்காசி – கடையநல்லூர் இடைகால் ரயில் தண்டவாளத்தில் நேற்று முன்தினம் இரவு 7 மணிக்கு செங்கோட்டை – சென்னை பொதிகை எக்ஸ்பிரஸ் ரயிலில் 40 வயது மதிக்கத்தக்க ஆண் ஒருவர் அடிபட்டு கால், தலை துண்டான நிலையில் இறந்து கிடந்தார். அவர் யார், எந்த ஊரைச் சேர்ந்தவர் என தெரியவில்லை. தகவலின் பேரில் ரயில்வே போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் மாரியப்பன் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று பலியானவரின் உடலை கைப்பற்றி தென்காசி அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். இது குறித்து நயினாரகரம் விஏஓ பிரபு சீனிவாசன் அளித்த புகாரின் பேரில் வில்லிபுத்தூர் ரயில்வே போலீசார் வழக்கு பதிவு செய்து பல்வேறு கோணங்களில் விசாரணை நடத்தி வருகின்றனர்.

The post கடையநல்லூர் அருகே ரயிலில் அடிபட்டு ஒருவர் பலி appeared first on Dinakaran.

Tags : Kadayanallur ,Sengottai ,Chennai ,Thenkasi-Kadayanallur ,
× RELATED கடையநல்லூர் நகராட்சியில் 17 ஆண்டுகளாக...