×
Saravana Stores

பைக் விபத்தில் 2 பேர் பலி

செங்கம்: திருவண்ணாமலை மாவட்டம், செங்கம் அடுத்த ேமல்செங்கம் கிராமத்தைச் சேர்ந்தவர் ராஜேஷ்(31). அதே பகுதியைச் சேர்ந்தவர் சந்திரசேகர் (18). நண்பர்களான இருவரும் நேற்றுமுன்தினம் இரவு பைக்கில் செங்கத்திற்கு சென்றுவிட்டு வீடு திரும்பி கொண்டிருந்தனர். செங்கம் அருகே சென்றபோது அவ்வழியாக வந்த அடையாளம் தெரியாத வாகனம் பைக் மீது மோதியதில் இருவரும் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தனர்.

The post பைக் விபத்தில் 2 பேர் பலி appeared first on Dinakaran.

Tags : Sengam ,Rajesh ,Yemalsengam ,Thiruvannamalai district, Sengam ,Chandrasekhar ,Chengam ,Dinakaran ,
× RELATED தென்பெண்ணை ஆற்றில் திடீர்...