×
Saravana Stores

சென்னை உயர்நீதிமன்றத்தின் புதிய தலைமை நீதிபதியாக கே.ஆர்.ஸ்ரீராம் நியமனம்: உச்ச நீதிமன்ற நீதிபதியாகிறார் பொறுப்பு தலைமை நீதிபதி ஆர்.மகாதேவன்

புதுடெல்லி: சென்னை உயர் நீதிமன்றத்தின் புதிய தலைமை நீதிபதியாக கே.ஆர்.ஸ்ரீராம் நியமிக்கப்பட்டுள்ளார். பொறுப்பு தலைமை நீதிபதியாக இருந்த ஆர்.மகாதேவன், உச்ச நீதிமன்ற நீதிபதியாக நியமிக்க கொலிஜியம் பரிந்துரைத்துள்ளது. உச்ச நீதிமன்றத்தில் தலைமை நீதிபதி உட்பட தற்போது மொத்தம் 32 நீதிபதிகள் பணியாற்றி வருகின்றனர். அனுமதிக்கப்பட்ட மொத்த நீதிபதிகளின் எண்ணிக்கை 34 என்ற நிலையில் 2 நீதிபதி பணியிடங்கள் காலியாக உள்ளன. இந்நிலையில், உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி டி.ஒய்.சந்திரசூட் தலைமையில் நீதிபதிகள் சஞ்சீவ் கண்ணா, பி.ஆர்.கவாய், சூர்ய காந்த் மற்றும் ஹிருஷிகேஷ் ராய் ஆகியோர் அடங்கிய கொலிஜியம், உச்ச நீதிமன்றத்திற்கு மேலும் 2 நீதிபதிகள் மற்றும் சென்னை உயர்நீதிமன்றத்திற்கு புதிய தலைமை நீதிபதியை நியமித்து ஒன்றிய அரசுக்கு பரிந்துரை வழங்கியுள்ளது.

சென்னை உயர்நீதிமன்றத்திற்கு புதிய தலைமை நீதிபதிகாக கே.ஆர்.ஸ்ரீராம் ( கல்பாத்தி ராஜேந்திரன் ஸ்ரீராம்) நியமனம் செய்யப்பட்டுள்ளார். மும்பையில் பிறந்த கே.ஆர்.ஸ்ரீராம், நிதிக் கணக்கியல் மற்றும் மேலாண்மையில் பி.காம் மற்றும் எல்.எல்.பி முடித்தார். மும்பை பல்கலைக்கழகத்தில் இருந்து, தொடர்ந்து எல்.எல்.எம். (கடல் சட்டம்) லண்டன் கிங்ஸ் கல்லூரியில் இருந்து. அவர் எல்.எல்.எம் தகுதி பெற்றவர் என்பது குறிப்பிடத்தக்கது. சென்னை உயர்நீதிமன்றத்தின் தற்போதைய பொறுப்பு தலைமை நீதிபதியாக உள்ள ஆர்.மகாதேவன் உச்ச நீதிமன்றத்தின் நீதிபதியாக நியமிக்க கொலிஜியம் பரிந்துரைத்துள்ளது. ஜம்மு காஷ்மீர் உயர் நீதிமன்றத்தின் தலைமை நீதிபதி என்.கோடீஸ்வர் சிங்-கை உச்ச நீதிமன்றத்தின் நீதிபதியாக நியமனம் செய்யவும் ஒன்றிய அரசுக்கு கொலிஜியம் பரிந்துரை வழங்கியுள்ளது. உச்ச நீதிமன்ற வரலாற்றில் மணிப்பூர் மாநிலத்தை சேர்ந்த நீதிபதிகள் இதுவரை இடம்பெறாத நிலையில் என்.கோடீஸ்வர் சிங் மணிப்பூர் மாநிலத்தை சேர்ந்தவர் என்பதால், மணிப்பூர் மாநிலத்தை சேர்ந்த முதல் உச்ச நீதிமன்ற நீதிபதி என்ற அந்தஸ்தை பெற உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

The post சென்னை உயர்நீதிமன்றத்தின் புதிய தலைமை நீதிபதியாக கே.ஆர்.ஸ்ரீராம் நியமனம்: உச்ச நீதிமன்ற நீதிபதியாகிறார் பொறுப்பு தலைமை நீதிபதி ஆர்.மகாதேவன் appeared first on Dinakaran.

Tags : KR Sriram ,Chief Justice of ,Madras High Court ,Chief Justice ,R. Mahadevan ,Supreme Court ,New Delhi ,Dinakaran ,
× RELATED ஐகோர்ட் தலைமை நீதிபதியுடன் முதல்வர் ரங்கசாமி சந்திப்பு