- ஆம் ஆத்மி கட்சி
- சஞ்சய் சிங் சரண்
- சுல்தான்பூர்
- ராஜ்ய சபா
- தில்லி
- முதல் அமைச்சர்
- கெஜ்ரிவால் சஞ்சய் சிங்
- சுல்தான்பூர்
- உத்திரப்பிரதேசம்
- ஆம் ஆத்மி கட்சி மாவட்ட பஞ்சாயத்து
- சஞ்சய் சிங்
சுல்தான்பூர்: டெல்லி முதல்வர் கெஜ்ரிவால் தலைமையிலான ஆம் ஆத்மி கட்சியின் மாநிலங்களவை உறுப்பினர் சஞ்சய் சிங். கடந்த 2021ம் ஆண்டில் கொரோனா விதிமுறைகளை மீறியது தொடர்பாக உத்தரபிரதேச மாநிலம் சுல்தான்பூரில் வழக்கு உள்ளது. அங்கு ஆம்ஆத்மி கட்சியின் மாவட்ட பஞ்சாயத்து உறுப்பினர் சல்மா பேகத்திற்கு ஆதரவாக ஹசன்பூர் கிராமத்தில் சஞ்சய்சிங் தேர்தல் பிரசார பொதுக்கூட்டம் நடத்தினார். இந்த வழக்கில் சஞ்சய் சிங் எம்பி ஆஜராகாததால் அவருக்கு எதிராக பிடிவாரண்ட் பிறப்பித்து சுல்தான்பூர் சிறப்பு எம்பி, எம்எல்ஏ வழக்கை விசாரிக்கும் மாஜிஸ்திரேட் ஷூபம் வர்மா உத்தரவிட்டார். இதையடுத்து நேற்று சஞ்சய் சிங் எம்பி நீதிமன்றத்தில் சரண் அடைந்தார். இதையடுத்து அவருக்கு ஜாமீன் வழங்கி நீதிபதி உத்தரவிட்டார்.
The post கொரோனா விதிமுறை மீறல் ஆம்ஆத்மி எம்பி சஞ்சய் சிங் சரண் appeared first on Dinakaran.