- குடரூ
- திருவன்மியூர் பொம்பன் சுவாமி கோயில்
- சென்னை
- உச்ச நீதிமன்றம்
- சென்னை உயர் நீதிமன்றம்
- பம்பன் சுவாமி கோயில்
- திருவன்மியூர், சென்னை
- சென்னை திருவன்மியூர் பம்பன் சுவாமி கோயில்
- தின மலர்
சென்னை: சென்னை திருவான்மியூர் பாம்பன் சுவாமி கோயிலில் நாளை குடமுழுக்கு நடத்த தடையில்லை உச்சநீதிமன்றம் கூறியுள்ளது. சென்னை திருவான்மியூரில் உள்ள பாம்பன் சுவாமி கோயில் குடமுழுக்கு விழா நடத்துவதற்க்கு தடை விதிக்க மறுப்பு தெரிவித்த சென்னை உயர்நீதிமன்ற தீர்ப்பை எதிர்த்து தாக்கல் செய்த மனுவை தள்ளுபடி செய்து உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
சென்னை திருவான்மியூரில் உள்ள பாமன் சுவாமி கோயிலை அறநிலையத்துறை கட்டுப்பட்டில் தமிழ்நாடு அரசு கொண்டுவந்தது. இதனை அடுத்து கும்பாபிஷேகம் நடத்த நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு நாளை கும்பாபிஷேகம் நடத்தப்படவுள்ளது. இந்த சூழலில் தமிழ்நாடு அரசின் முடிவுக்கு எதிராக மயூரபுரம் பாம்பன் ஸ்ரீமத் குமரகுருதாச அன்னதான சபையின் தலைவர் சரவணன் என்பவர் சென்னை உயர்நீதிமன்றத்தில் குடமுழுக்கு நடத்துவதற்கு எதிராக வழக்கு தொடர்ந்திருந்தார். இந்த வழக்கை விசாரித்த சென்னை உயர்நீதிமன்றம் குடமுழுக்கு நடத்த எந்த தடையும் இல்லை என்றும் தேவைபட்டால் மனு தாரர் அறநிலையத்துறையிடம் கோரிக்கை வைக்கலாம் என உத்தரவு பிறப்பித்திருந்தது.
இந்த உத்தரவை எதிர்த்து சரவணன் சார்பில் உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீட்டு மனு தாக்கல் செய்யப்பட்டது. இந்த வழக்கு நீதிபதி ஸ்ருதிகேஸ் ராய் தலைமையிலான அமர்வில் விசாரணைக்கு வந்தது. இந்த வழக்கில் தமிழ்நாடு அரசு சார்பில் ஆஜராகியிருந்த வழக்கறிஞர்கள் இந்த கோயில் தமிழ்நாடு அறநிலையத்துறை கட்டுப்பட்டில் கொண்டுவரப்பட்டுள்ளதாகவும், அந்த கோயிலில் சீறமைப்புகள் நடத்தப்பட்டு குடமுழுக்கு நடத்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாகவும், நாளை குடமுழுக்கு விழா நடத்தப்படவுள்ள இந்த சூழலில் உயர்நீதிமன்றம் தடை விதிக்காததை அடுத்து குடமுழுக்கு நடத்த அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளது எனவே இந்த மனுவை தள்ளுபஇ செய்ய வேண்டும் என கோரிக்கை வைக்கப்பட்டது.
இதனை ஏற்றுகொண்ட நீதிபதிகள் சென்னை உயர்நீதிமன்றம் அளித்த தீர்ப்புக்கு எந்தவித தடையும் இல்லை என்று உத்தரவிட்டு சரவணன் என்பவர் தாக்கல் செய்த மேல்முறையீட்டு மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டுள்ளனர்.
The post சென்னை திருவான்மியூர் பாம்பன் சுவாமி கோயிலில் நாளை குடமுழுக்கு நடத்த தடையில்லை: உச்சநீதிமன்றம் உத்தரவு appeared first on Dinakaran.