×

எல்லை தாண்டி மீன் பிடித்ததாக கூறி 13 தமிழக மீனவர்களை கைது செய்தது இலங்கை கடற்படை!

புதுக்கோட்டை: நெடுந்தீவு கடற்பகுதியில் மீன்பிடித்துக் கொண்டிருந்த 13 தமிழக மீனவர்களை இலங்கை கடற்படை கைது செய்தது. தமிழக மீனவர்களின் மூன்று விசைப்படகுகளையும் இலங்கை கடற்படையினர் பறிமுதல் செய்தனர்.

தமிழக மீனவர்கள் 13 பேரை இலங்கை கடற்படையினர் கைது செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. நெடுந்தீவு அருகே மீன்பிடித்துக் கொண்டிருந்தபோது, எல்லை தாண்டி மீன் பிடித்ததாக கைது நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

புதுக்கோட்டை மாவட்ட மீன்பிடித் துறைமுகத்தில் இருந்து மீனவர்கள் 3 விசைப்படகுகளில் மீன்பிடிக்கச் சென்றுள்ளனர். அப்போது நெடுந்தீவு அருகே மீன்பிடித்துக் கொண்டிருந்தபோது, எல்லை தாண்டி மீன்பிடித்ததாக இலங்கை கடற்படையினர் கைது செய்தனர்.

மீனவர்கள் சென்ற 3 விசைப்படகுகளையும் இலங்கை கடற்படையினர் பறிமுதல் செய்து அத்தோழியத்தில் ஈடுபட்டுள்ளனர். கைது செய்யப்பட்டுள்ள தமிழக மீனவர்கள் 13 போரையும் விசாரணைக்காக காங்கேசன் கடற்படை முகாமுக்கு அழைத்துச் செல்ல திட்டம் எனவும் தகவல் வெளியாகியுள்ளது.

The post எல்லை தாண்டி மீன் பிடித்ததாக கூறி 13 தமிழக மீனவர்களை கைது செய்தது இலங்கை கடற்படை! appeared first on Dinakaran.

Tags : Sri Lanka Navy ,Pudukkottai ,Neduntivu Sea ,Sri Lankan Navy ,
× RELATED புதுக்கோட்டை மாவட்டத்தை சேர்ந்த 9 மீனவர்களை கைது செய்தது இலங்கை கடற்படை