லண்டன்: இங்கிலாந்து அணியுடனான முதல் டெஸ்டின் முதல் இன்னிங்சில் வெஸ்ட் இண்டீஸ் 121 ரன்னுக்கு ஆல் அவுட்டானது. அறிமுக வேகப் பந்துவீச்சாளர் கஸ் அட்கின்சன் 7 விக்கெட் கைப்பற்றி அசத்தினார். லார்ட்ஸ் மைதானத்தில் நேற்று தொடங்கிய இப்போட்டியில், டாஸ் வென்ற இங்கிலாந்து முதலில் பந்துவீசியது. இங்கிலாந்து அணியில் கஸ் அட்கின்சன், ஜேமி ஸ்மித், வெஸ்ட் இண்டீஸ் அணியில் மிகைல் லூயிஸ் அறிமுகமாகினர். அட்கின்சனின் துல்லியமான வேகப் பந்துவீச்சை சமாளிக்க முடியாமல் திணறிய வெஸ்ட் இண்டீஸ் 41.4 ஓவரில் 121 ரன் மட்டுமே சேர்த்து அனைத்து விக்கெட்டையும் பறிகொடுத்தது.
மிகைல் லூயிஸ் அதிகபட்சமாக 27 ரன் எடுத்தார். கவெம் ஹோட்ஜ் 24, அலிக் அதனேஸ் 23, அல்ஜாரி ஜோசப் 17, குடகேஷ் 14* ரன் எடுத்தனர். இங்கிலாந்து பந்துவீச்சில் அட்கின்சன் 12 ஓவரில் 5 மெய்டன் உள்பட 45 ரன் விட்டுக்கொடுத்து 7 விக்கெட் கைப்பற்றினார். ஸ்டோக்ஸ், வோக்ஸ், ஆண்டர்சன் தலா 1 விக்கெட் வீழ்த்தினர். இதைத் தொடர்ந்து, இங்கிலாந்து அணி முதல் இன்னிங்சை தொடங்கி விளையாடியது.
The post 121 ரன்னில் சுருண்டது வெஸ்ட் இண்டீஸ்: அறிமுக வேகம் அட்கின்சன் அமர்க்களம் appeared first on Dinakaran.