×

நாடு முழுவதும் 13 தொகுதிகளில் இடைத்தேர்தல்; நாளை மறுநாள் ஓட்டு எண்ணிக்கை

புதுடெல்லி: நாடு முழுவதும் 13 சட்டப்பேரவை தொகுதிகளில் நேற்று இடைத்தேர்தல் நடந்தது. இங்கு நாளை மறுநாள் ஓட்டு எண்ணிக்கை நடக்கிறது. தமிழ்நாட்டில் விக்கிரவாண்டி, மேற்குவங்கத்தில் ராய்கஞ்ச், ரானாகட், தக்‌ஷின், பாக்டா மணிக்கட்லா, இமாச்சலப்பிரதேசத்தில் டெஹ்ரா, ஹமிர்பூர், நளகர், பஞ்சாப் மாநிலத்தில் ஜலந்தர் மேற்கு, உத்தரகாண்டில் பத்ரிநாத், மங்க்ளார், பீகாரில் ரூபாலி, மத்தியப்பிரதேசத்தில் அமர்வாரா தொகுதிகள் காலியாக இருந்தன. இந்த 7 மாநிலங்களிலும் காலியாக உள்ள 13 தொகுதிகளிலும் நேற்று இடைத்தேர்தல் நடந்தது. இதில் இமாச்சல் மாநிலம் டெஹ்ரா தொகுதியில் காங்கிரஸ் சார்பில் முதல்வர் சுக்விந்தர் சிங் சுகுவின் மனைவி கமலேஷ் போட்டியிடுவதால் மிகுந்த எதிர்பார்ப்பு ஏற்பட்டது.

இந்த இடைத்தேர்தல் வாக்குப்பதிவில் உத்தரகாண்ட் மற்றும் மேற்கு வங்கத்தில் ஆங்காங்கே சில வன்முறைச் சம்பவங்கள் நடந்தன. மற்றமாநிலங்களில் அமைதியாக வாக்குப்பதிவு நடந்தது. உத்தரகாண்ட் மாநிலம் மங்களூர் தொகுதியில் வாக்குச் சாவடியில் போட்டிக் கட்சிகளின் ஆதரவாளர்களுக்கு இடையே ஏற்பட்ட மோதலில் 4 பேர் காயமடைந்தனர். அங்கு துப்பாக்கிச்சூடு நடந்ததாகவும் கூறப்படுகிறது. இதே போல் பீகாரில் ருபாலி தொகுதியில் பவானிபூர் பூத்தில் கூடிய கும்பல் தாக்கியதில் ஒரு எஸ்ஐ மற்றும் போலீஸ்காரர் காயம் அடைந்தனர். நேற்று தேர்தல் நடந்த 13 தொகுதிகளிலும் நாளை மறுநாள் ஓட்டு எண்ணிக்கை நடக்கிறது.

The post நாடு முழுவதும் 13 தொகுதிகளில் இடைத்தேர்தல்; நாளை மறுநாள் ஓட்டு எண்ணிக்கை appeared first on Dinakaran.

Tags : New Delhi ,Vikravandi ,Tamil Nadu ,Raiganj ,Ranagat ,Dakshin ,Bhakta Manikatla ,West Bengal ,Dehra ,Hamirpur ,Nalakar ,Himachal Pradesh ,Jalandhar ,Punjab ,
× RELATED விக்கிரவாண்டியில் 23ம் தேதி மாநாடு...