×

மீண்டும் ஜல்லிக்கட்டை கையில் எடுத்த பீட்டா.. உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பை மறு ஆய்வு செய்ய மனு தாக்கல்..!!

டெல்லி: ஜல்லிக்கட்டு தீர்ப்புக்கு எதிராக விலங்குகள் நல அமைப்பான பீட்டா உச்சநீதிமன்றத்தில் சீராய்வு மனு தாக்கல் செய்துள்ளது. ஜல்லிக்கட்டு நிகழ்வுகளுக்கு அனுமதி கோரி 2017ம் ஆண்டு பெரும் புரட்சி தமிழ்நாட்டில் நடைபெற்றது. சென்னை மெரினாவில் மாணவர்கள் தொடங்கிய புரட்சி தமிழ்நாட்டையும் குலுங்க வைத்தது. இந்த கிளர்ச்சியால்தான் ஜல்லிக்கட்டு நடத்துவதற்கான புதிய சட்டம் கொண்டுவரப்பட்டு ஜனாதிபதி ஒப்புதல் பெறப்பட்டது. அப்போதும் தமிழருக்கு எதிராக நின்ற பீட்டா உச்சநீதிமன்றம் போனது.

பீட்டாவின் மனுவை விசாரித்த உச்சநீதிமன்றமானது கடந்த ஆண்டு மே மாதம் 18ம் தேதி வரலாற்று சிறப்புமிக்க தீர்ப்பு வழங்கியது. 5 நீதிபதிகள் கொண்ட உச்சநீதிமன்ற அரசியல் சாசன அமர்வு வழங்கிய ஒருமித்த தீர்ப்பில், ஜல்லிக்கட்டுக்கு தடை விதிக்க முடியாது என்றும், ஜல்லிக்கட்டு தொடர்பாக தமிழக அரசு இயற்றிய சட்டம் செல்லும் என்று தீர்ப்பு அளிக்கப்பட்டது. இந்த தீர்ப்பில் ஜல்லிக்கட்டு தமிழர்களின் கலாசாரம், ஆனாலும் இந்த விளையாட்டின்போது நேரும் துன்புறுத்தல்களைத் தவிர்க்க உரிய வழிமுறைகளைக் கடைப்பிடிக்க வேண்டும் என்று அறிவுறுத்தி இருந்தது.

இதையடுத்து உச்சநீதிமன்றம் அளித்த தீர்ப்புக்கு எதிராக ஜல்லிக்கட்டுக்கு தடை விதிக்க கோரி விலங்குகள் நல அமைப்பான பீட்டா உச்சநீதிமன்றத்தில் ஓராண்டுக்கு முன்னர் சீராய்வு மனுவைத் தாக்கல் செய்தது. இம்மனு விசாரணைக்கு வராமலேயே கிடப்பில் கிடந்தது. இந்நிலையில் சீராய்வு மனுவை விரைந்து விசாரிக்க வேண்டும் என இன்று உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி சந்திரசூட் அமர்வில் பீட்டா தரப்பில் ஆஜராகின மூத்த வழக்கறிஞர் சித்தார்த் முறையீடு செய்தார். இதனைத் தொடர்ந்து வழக்கு விவரங்களை மின் அஞ்சலில் அனுப்ப பீட்டாவுக்கு தலைமை நீதிபதி சந்திரசூட் அறிவுறுத்தினார்.

 

The post மீண்டும் ஜல்லிக்கட்டை கையில் எடுத்த பீட்டா.. உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பை மறு ஆய்வு செய்ய மனு தாக்கல்..!! appeared first on Dinakaran.

Tags : Jalliket ,Supreme Court ,Delhi ,Beta ,Jallikatu ,Great Revolution of 2017 ,Tamil Nadu ,Chennai Marina ,Jallikkata ,
× RELATED ஒரு வழக்கில் ஒருவர் கைதாகிறார்...