- முதல்வர்
- மு. கே.
- ஸ்டாலின்
- திமுகா
- விக்ரிவாண்டி
- மக்தல்வார்
- . க.
- அன்னியூர் சிவன்
- விக்ராவண்டி இடைக்கால தேர்தல்
- அன்னியூர்
- எம். க.
- தின மலர்
விக்கிரவாண்டி: தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் செய்துள்ள சாதனைகளால் பெருவாரியான வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெறுவேன் என திமுக வேட்பாளர் அன்னியூர் சிவா கூறினார். விக்கிரவாண்டி இடைத்தேர்தலில் போட்டியிடும் திமுக வேட்பாளர் அன்னியூர் சிவா இன்று காலை தனது சொந்த ஊரான அன்னியூரில் உள்ள அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்யில் தனது மனைவி வனிதா, தந்தை அரிபுத்திரி மற்றும் குடும்ப உறுப்பினர்களுடன் சென்று வாக்களித்தார்.
இதன்பின்னர் அவர் நிருபர்களிடம் கூறியதாவது:
விக்கிரவாண்டி வாக்காளர் என்ற முறையில் நான் வாக்களித்துள்ளேன். விக்கிரவாண்டி தொகுதி அனைத்து வாக்காளர்களும் ஜனநாயக கடமையாற்ற வேண்டும். தமிழ்நாடு முதலமைச்சரின் சாதனைகளால் நான் பெருவாரியான வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெறுவேன். இவ்வாறு கூறினார்.
The post முதல்வர் மு.க.ஸ்டாலின் சாதனைகளால் அதிக வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெறுவேன்; திமுக வேட்பாளர் உறுதி appeared first on Dinakaran.