×

குன்னூர் ராணுவ ஹெலிகாப்டர் விபத்து குரூப் கேப்டன் வருண் சிங்கும் சிகிச்சை பலனின்றி உயிரிழப்பு: ஜனாதிபதி, பிரதமர் இரங்கல்

புதுடெல்லி: குன்னூரில் நடந்த ஹெலிகாப்டர் விபத்தில் படுகாயத்துடன் உயிர் தப்பிய குரூப் கேப்டன் வருண் சிங்கும், சிகிச்சை பலனின்றி நேற்று காலமானார். குன்னூர் அருகே வெலிங்டனில் உள்ள ராணுவ பயிற்சி கல்லூரியின் நிகழ்ச்சிகளில் பங்கேற்பதற்காக முப்படைகளின் தலைமை தளபதி பிபின் ராவத் அவரது மனைவி மதுலிகாவுடன் கடந்த 8ம் தேதி கோவை வந்தார். அவர்கள் சூலூரில் இருந்து இந்திய விமானப்படைக்கு சொந்தமான எம்ஐ-17 வி5 ரக ஹெலிகாப்டரில் வெலிங்டன் புறப்பட்டனர். இந்த ஹெலிகாப்டர் காட்டேரி பகுதியை கடந்த போது, திடீரென தீப்பிடித்து விபத்துக்குள்ளானது. இதில், பிபின் ராவத், மதுலிகா உள்பட 13 பேர் உயிரிழந்தனர். இந்த விபத்தில் குரூப் கேப்டன் வருண் சிங் மட்டும் தீக்காயங்களுடன் மீட்கப்பட்டார். பலத்த தீக்காயம் அடைந்த அவர், பெங்களூருவில் உள்ள ராணுவ மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். ஆனால், ஒரு வாரத்துக்குப் பிறகு சிகிச்சை பலன் அளிக்காமல் நேற்று அவர் உயிரிழந்தார். இவருடைய மறைவுக்கு ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த், பிரதமர் மோடி மற்றும் பல்வேறு கட்சித் தலைவர்கள் ஆழ்ந்த இரங்கல் தெரிவித்துள்ளனர். ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் தனது டிவிட்டர் பதிவில், `வாழ்வதற்காக போராடிய குரூப் கேப்டன் வருண் சிங் உயிரிழந்த செய்தி கேட்டு வருத்தம் அடைந்தேன். விபத்தில் அதிக தீக்காயங்கள் அடைந்தாலும், வீரருக்குரிய வீரம், அசைக்க முடியாத தைரியத்தை அவரிடம் காண முடிந்தது. நாடு அவருக்கு கடமைப்பட்டிருக்கிறது. அவரது குடும்பத்தினருக்கு ஆழ்ந்த இரங்கல்கள்,’ என்று கூறியுள்ளார். பிரதமர் மோடி தனது டிவிட்டர் பதிவில், `குரூப் கேப்டன் வருண் சிங் நாட்டிற்காக பெருமை, வீரம் மற்றும் மிகவும் அக்கறையுடன் சேவை புரிந்தார். அவர் இறந்த செய்தி கேட்டு மிகுந்த வேதனை அடைந்தேன். அவருடைய சேவையை நாடு ஒருபோதும் மறக்காது. அவரது குடும்பத்தினர், நண்பர்களுக்கு ஆழ்ந்த இரங்கல்கள். ஓம் சாந்தி,’ என்று கூறியுள்ளார்.* முதல்வர் மு.க.ஸ்டாலின் இரங்கல்குரூப் கேப்டன் வருண் சிங் மறைவிற்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் நேற்று வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியில், ‘குன்னூர் அருகே நடந்த துயர்மிகு ஹெலிகாப்டர் விபத்தில் காயமுற்று சிகிச்சை பெற்று வந்த குரூப் கேப்டன் வருண் சிங் உயிரிழந்துவிட்டார் என்ற துன்பச் செய்தி கேட்டு பெரிதும் வருத்தமுற்றேன். அவரது தீரமும், கடமையுணர்வும் அனைவருக்கும் ஊக்கமாக அமைவதுடன், என்றும் அவர் நம் நினைவுகளில் நிலைத்து வாழ்வார்,’ என கூறியுள்ளார்.* எல்.முருகன் இரங்கல்  ஒன்றிய தகவல் ஒலிபரப்புத் துறை இணையமைச்சர் எல்.முருகன் தனது இரங்கல் செய்தியில், ‘குன்னூர் ஹெலிகாப்டர் விபத்தில் தீக்காயமடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த குரூப் கேப்டன் வருண் சிங் உயிரிழந்தது மிகவும் மன வருத்தம் அளிக்கிறது. அவரது குடும்பத்திற்கு என் ஆழ்ந்த ஆறுதலை தெரிவித்துக் கொள்வதோடு, அவரின் ஆத்மா சாந்தியடைய இறைவனை பிரார்த்திக்கிறேன்,’ என்று தெரிவித்துள்ளார்.* வருண் சிங் கடந்தாண்டு தேஜஸ் ரக போர் விமானங்களை இயக்கிய போது, தொழில்நுட்ப கோளாறு காரணமாக விபத்து ஏற்பட்டது. அதில் அவர் லாவகமாக உயிர் தப்பினார். இதற்கு அவருக்கு, ‘ஷவுர்யா சக்ரா’ விருது வழங்கப்பட்டது….

The post குன்னூர் ராணுவ ஹெலிகாப்டர் விபத்து குரூப் கேப்டன் வருண் சிங்கும் சிகிச்சை பலனின்றி உயிரிழப்பு: ஜனாதிபதி, பிரதமர் இரங்கல் appeared first on Dinakaran.

Tags : Coonoor Army ,Group ,Varun Singh ,President ,New Delhi ,Coonoor ,Dinakaran ,
× RELATED திருத்தப்பட்ட ஆண்டு திட்ட அட்டவணையை வெளியிட்டது டி.என்.பி.எஸ்.சி.