விழுப்புரம்: விக்கிரவாண்டி சட்டப்பேரவை 2 தொகுதிக்கான இடைத்தேர்தலில் காலை 9 மணி நிலவரப்படி 12.94% வாக்குகள் பதிவாகியுள்ளன. விக்கிரவாண்டி சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தலுக்கான வாக்குப்பதிவு நடைபெற்று வருகிறது. காலை 7 மணிக்கு வாக்குப்பதிவு தொடங்கியதில் இருந்து பொதுமக்கள் ஆர்வத்துடன் வரிசையில் நின்று வாக்களித்து வருகின்றனர். விக்கிரவாண்டி தொகுதியில் வாக்காளர்கள் வாக்களிக்க வசதியாக 276 வாக்குச்சாவடி மையங்கள் அமைக்கப்பட்டுள்ளது. பதற்றமான வாக்குச்சாவடிகளில் துணை ராணுவத்தினர் குவிக்கப்பட்டுள்ளனர். வாக்குப்பதிவு தொடங்கியதும் தி.மு.க. வேட்பாளர் அன்னியூர் சிவா தனது வாக்கினை செலுத்தினார்.
பாமக வேட்பாளர் சி. அன்புமணியும் தனது ஜனநாயக கடமையை நிறைவேற்றினார். இந்நிலையில், இடைத்தேர்தலில் காலை 9 மணி நிலவரப்படி 12.94 சதவீத வாக்குகள் பதிவாகியுள்ளது. இன்று மாலை 6 மணிக்கு வாக்குப்பதிவு முடிந்ததும் வாக்குச்சாவடி முகவர்கள் முன்னிலையில் இயந்திரங்கள் சீல் வைக்கப்பட்டு வாக்கு எண்ணிக்கை மையமான பனையபுரம் அரசு மேல்நிலைப்பள்ளிக்கு கொண்டு செல்லப்படுகிறது. இன்று பதிவாகும் வாக்குகள் வருகிற 13-ம்தேதி எண்ணப்பட உள்ளன.
The post விக்கிரவாண்டி தொகுதி இடைத்தேர்தல்: காலை 9 மணி நிலவரப்படி 12.94% வாக்குப்பதிவு appeared first on Dinakaran.