×
Saravana Stores

இந்தோனேஷியாவில் தங்கசுரங்கத்தில் நிலச்சரிவு 23 பேர்பலி; 35 பேர் மாயம்

ஜகார்த்தா: இந்தோனேஷியாவில் தங்கச்சுரங்கத்தில் ஏற்பட்ட நிலச்சரிவில் சிக்கி 23 பேர் பலியாகி விட்டனர். பலரை காணவில்லை. இந்தோனேசியாவின் சுலவேசி தீவில் அரசால் அங்கீகரிக்கப்படாத தங்கச் சுரங்கம் உள்ளது. இங்குள்ள மலைப்பகுதி கிராமமான போன் பொலாங்கோவில் 100க்கும் மேற்பட்டோர் தங்கம் தேடிக்கொண்டு இருந்தனர். அப்போது திடீரென மலையில் இருந்து மண் சரிந்து சுரங்கப்பகுதியை மூடியது. இதில் தங்கம் தேடிக்கொண்டு இருந்த நூற்றுக்கணக்கான மக்கள் சிக்கிக்கொண்டனர். இந்த நிலச்சரிவில் 23 பேர் பலியானார்கள். 66 பேர் மீட்கப்பட்டனர். மேலும் 35 பேரை காணவில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது. அங்கு பெய்து வரும் கனமழையால் நிலச்சரிவு ஏற்பட்டு போன் பொலாங்கோவில் உள்ள ஐந்து கிராமங்களில் வெள்ளம் புகுந்துள்ளது. இதில் 300 வீடுகள் மூழ்கிவிட்டதாகவும், 1,000 க்கும் மேற்பட்ட மக்கள் பாதுகாப்பாக அப்புறப்படுத்தப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

The post இந்தோனேஷியாவில் தங்கசுரங்கத்தில் நிலச்சரிவு 23 பேர்பலி; 35 பேர் மாயம் appeared first on Dinakaran.

Tags : Indonesia ,Jakarta ,Sulawesi ,Bon Polango ,Dinakaran ,
× RELATED லெவோடோபி எரிமலை வெடித்ததில் 9 பேர் உயிரிழப்பு