×
Saravana Stores

நன்மைகள் திமுக ஆட்சியில் மட்டுமே நடந்துள்ளது; விக்கிரவாண்டி தொகுதி வன்னியர்கள் உதயசூரியனுக்கு வாக்களிக்க வேண்டும்: விவசாயிகள் தொழிலாளர்கள் கட்சி தலைவர் பொன்குமார் வேண்டுகோள்

சென்னை: தமிழ்நாடு விவசாயிகள்-தொழிலாளர்கள் கட்சி தலைவர் பொன்குமார் இன்று வெளியிட்ட அறிக்கை: பாமக என்பது வன்னியர்களின் இட ஒதுக்கீட்டுக்காக, அதாவது சமூக நீதிக்காக தோற்றுவிக்கப்பட்ட ஒரு கட்சி ஆகும். ஆனால் சமூக நீதிக்கு எதிரான கொள்கையை தன்னுடைய அடிப்படை கொள்கையாகக் கொண்டு செயல்பட்டு வரும் பாஜகவோடு கூட்டணி அமைத்து இந்த தேர்தலில் வாக்குகளை கேட்டு வரும் பாமகவுக்கு நீங்கள் வாக்களிக்க வேண்டுமா? அப்படி வாக்களிப்பதன் மூலம் என்ன நிகழ்ந்து விடப் போகிறது? இன்னும் எத்தனை நாளைக்கு இட ஒதுக்கீட்டை அனுமதிக்க முடியும்? என்று ஆர்எஸ்எஸ் மற்றும் பாஜகவினர் தொடர்ந்து வெளிப்படையாக பேசி வருவதை இந்த நாடு அறியும். அப்படிப்பட்ட ஒரு கட்சியோடு பாமக கூட்டணி வைத்துக்கொண்டு எங்களுக்கு வாக்களியுங்கள் என்று கேட்பது யாரை ஏமாற்றிட என்பதை வன்னிய வாக்காளர்கள் சிந்தித்து பார்க்க வேண்டும்.

அரசியல் கடந்து வன்னியர்கள் சிந்தித்துப் பார்த்தால் வன்னியர் சமூகத்திற்கு எந்த கட்சி ஆட்சி காலத்தில் நன்மைகள் நடந்துள்ளன என்பது புலப்படும். நேற்று கூட முதல்வர் மு.க.ஸ்டாலின் திமுக ஆட்சி காலத்தில் வன்னியர் சமுதாயத்திற்கு நடந்த நன்மைகள் குறித்து பட்டியலிட்டுள்ளார். ஒவ்வொரு காலக்கட்டத்திலும் வன்னியர்களுக்கு கிடைத்த நன்மைகள் எல்லாம் திமுக ஆட்சியில் கலைஞரால் மட்டுமே நடந்துள்ளது என்பதை எவராலும் மறந்து விட முடியாது. எனவே விக்கிரவாண்டி தொகுதி வன்னிய வாக்காளப் பெருமக்கள் அனைவரும் வாக்களிப்பதற்கு முன் சிந்தித்துப் பார்த்து உங்கள் வாக்குகளை உதயசூரியன் சின்னத்தில் அளிப்பதன் மூலம் மேலும் வன்னியர்களுக்கானத் திட்டங்களை பெற்றிட வாய்ப்பாக அமையும் என அன்போடு கேட்டுக்கொள்கிறேன். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

 

The post நன்மைகள் திமுக ஆட்சியில் மட்டுமே நடந்துள்ளது; விக்கிரவாண்டி தொகுதி வன்னியர்கள் உதயசூரியனுக்கு வாக்களிக்க வேண்டும்: விவசாயிகள் தொழிலாளர்கள் கட்சி தலைவர் பொன்குமார் வேண்டுகோள் appeared first on Dinakaran.

Tags : Dimuka ,Wikiravandi ,Vannians ,Udayasuriyan ,Farmers Workers Party ,Ponkumar ,Chennai ,Tamil Nadu Farmers' Workers' Party ,Bamaka ,Wannians ,Dinakaran ,
× RELATED திமுக என்பது ஒரு ஆலமரம்; விமர்சனங்களை...