×

பங்காரு அடிகளார் இல்லத்திற்கு சென்று மணமக்கள் அகத்தியன்-ஷாலினிக்கு பூங்கொத்து கொடுத்து அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் வாழ்த்து

மதுராந்தகம்: மேல்மருவத்தூர் ஆதிபராசக்தி சித்தர் பீடத்தின் ஆன்மிக குரு பங்காரு அடிகளார், ஆன்மிக இயக்க தலைவர் லட்சுமி பங்காரு அடிகளாரின் பேரனும் ஆன்மிக மக்கள் தொண்டு இயக்க தலைவர் கோ.ப.அன்பழகன்-ஆஷா அன்பழகன் ஆகியோரின் இளைய மகன் அ.ஆ.அகத்தியன், பெரம்பூரை சேர்ந்த எஸ்.சதீஷ் நாராயணன்-எஸ்.விஜயலட்சுமி ஆகியோர்களின் மகள் டாக்டர் எஸ்.ஷாலினி ஆகியோரின் திருமண விழா மேல்மருவத்தூர் ஆதிபராசக்தி சித்தர் பீடம் அருகில் நடைபெற்றது. இதில் 108 ஓம் சக்தி போற்றி மந்திரங்கள் முழங்க ஆன்மிக இயக்கத் தலைவர் லட்சுமி பங்காரு அடிகளார் முன்னிலையில் மணமகன் அகத்தியன், மணமகள் ஷாலினிக்கு தாலி கட்டினார். இதில், அரசியல் கட்சி தலைவர்கள், ஆன்மிக மடாதிபதிகள், தொழிலதிபர்கள் என 40 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.

இந்நிலையில் நேற்று மாலை திமுக இளைஞர் அணி செயலாளரும் விளையாட்டு மேம்பாட்டு துறை அமைச்சருமான உதயநிதி ஸ்டாலின் மணமக்களை வாழ்த்த பங்காரு அடிகளாரின் இல்லத்திற்கு சென்றபோது, ஆன்மிக இயக்க துணை தலைவர் கோ.ப.அன்பழகன் மலர் கொத்து கொடுத்து வரவேற்றார். இதையடுத்து, மணமக்கள் அகத்தியன்-ஷாலினிக்கு அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் மலர் கொத்து கொடுத்து வாழ்த்து தெரிவித்து, பங்காரு அடிகளாரின் குடும்பத்தினருடன் கலந்துரையாடினார்.அமைச்சர் தா.மோ.அன்பரசன், காஞ்சிபுரம் தெற்கு மாவட்ட செயலாளர் க.சுந்தர் எம்எல்ஏ, காஞ்சிபுரம் எம்எல்ஏ எழிலரசன், மாநில இளைஞரணி துணை செயலாளர் அப்துல் மாலிக், மாவட்ட இளைஞரணி அமைப்பாளர் யுவராஜ் மற்றும் கட்சி நிர்வாகிகள் உடனிருந்தனர்.

 

The post பங்காரு அடிகளார் இல்லத்திற்கு சென்று மணமக்கள் அகத்தியன்-ஷாலினிக்கு பூங்கொத்து கொடுத்து அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் வாழ்த்து appeared first on Dinakaran.

Tags : Minister ,Udhayanidhi Stalin ,Agathiyan-Shalini ,Bangaru Adikalar ,AA Agathiyan ,Melmaruvathur Adiparashakti ,Siddhar Peedam Bangaru Adigalar ,Lakshmi Bangaru Adigalar ,Spiritual People's Charitable Movement ,G.O. ,
× RELATED துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் பிறந்த...