×

வெற்றிவீரன் மகாலிங்கம் இயக்கும் படம்

ரசிகர்களிடம் வரவேற்பு பெற்ற ‘அயலி’ என்ற வெப்தொடரில் நடித்திருந்த ‘அருவி’ மதன், அபி நட்சத்திரா, காயத்ரி, செல்லா ஆகியோர் மீண்டும் இணையும் திரைப்படத்தை வெற்றவீரன் மகாலிங்கம் இயக்குகிறார். சிறப்பு வேடத்தில் புகழ் நடிக்கிறார். சமீபத்தில் வரலாற்று கதாபாத்திரங்களை முன்னிறுத்தி போட்டோக்கள் எடுத்து வைரல் ஆனவரும், மற்றும் ‘நாட் ரீச்சபிள்’, ‘மிடில் கிளாஸ்’ ஆகிய படங்களில் நடித்து இருந்தவருமான சாய் ரோகிணி, தர்ஷன் பாஸ்கர், ‘அருவி’ பாலா, உதய்ராஜ், பிரியா, கனிஷ், பேபி ஷிவானி, மாஸ்டர் ராஜூ மகாலிங்கம் ஆகியோர் முக்கிய கேரக்டர்களில் நடிக்கின்றனர்.

சூரி நடிக்கும் அடுத்த படத்துக்கு கதை, திரைக்கதை எழுதியுள்ள வெற்றிவீரன் மகாலிங்கம், மேற்கண்ட புதிய படத்தை மகாலிங்கம் புரொடக்‌ஷன்ஸ் சார்பில் தயாரித்து எழுதி இயக்குகிறார். எஸ்.டி.சுரேஷ் இணைந்து தயாரிக்கிறார். சஞ்சய் லோக்நாத் ஒளிப்பதிவு செய்ய, வத்ஷன் இசை அமைக்கிறார். கடந்த 14ம் தேதி படப்பிடிப்பு தொடங்கியது.

The post வெற்றிவீரன் மகாலிங்கம் இயக்கும் படம் appeared first on Kollywood News | Kollywood Images - Cinema.dinakaran.com.

Tags : mahaalingam ,Vitaveeran Mahaalingam ,Abi Natra ,Kayathri ,Sella ,Kollywood News ,Kollywood Images ,
× RELATED திருமங்கலம் அருகே மின்வாரிய ஊழியர் தற்கொலை