×

சென்னை – ரஷ்யா இடையிலான கடல் வழி வர்த்தக தடத்தை உருவாக்கும் பணி நடைபெற்றுவருகிறது: ரஷ்யாவில் பிரதமர் மோடி பேச்சு

மாஸ்கோ: சென்னை – ரஷ்யா இடையிலான கடல் வழி வர்த்தக தடத்தை உருவாக்கும் பணி நடைபெற்று வருவதாக பிரதமர் மோடி தெரிவித்துள்ளார். ரஷ்யாவுக்கு அரசுமுறை பயணம் சென்றுள்ள பிரதமர் நரேந்திர மோடி அநாடில் வாழும் இந்தியர்களுடன் கலந்துரையாடினார்.

அப்போது; மூன்றாவது முறையாக ஆட்சி அமைத்த பிறகு, முதல்முறையாக புலம்பெயர்ந்த இந்தியர்களுடன் உரையாடுகிறேன். மூன்றாவது முறையாக இந்தியாவின் பிரதமராகப் பதவியேற்று இன்றுடன் ஒரு மாதம் நிறைவடைந்துள்ளது. 3 மடங்கு வலிமையுடன், 3 மடங்கு அதிக வேகத்தில் பணியாற்றுவேன் என்ற உறுதியுடன் பதவியேற்றேன். இம்முறை இந்தியாவை உலகின் மூன்றாவது பொருளாதாரமாக மாற்றுவதே இலக்கு என கூறினார்.

கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு வடக்கு -தெற்கை இணைக்கும் முதல் வர்த்தக வழித்தடம் ஒப்பந்தம் மேற்கொண்டதை சுட்டிக்காட்டினார். அந்த வர்த்தக வழித்தடம், இந்தியாவின் மும்பையில் இருந்து ரஷ்யாவின் 5 நகரங்களை இணைக்கிறது.

அதன் நீட்சியாக தற்போது சென்னையில் இருந்து விளாடிவோஸ்டாக் வரை கிழக்கு கடல் சார் வழித்தடத்தை உருவாக்கும் பணி நடைபெற்று வருவதாக பிரதமர் மோடி கூறினார். தொடர்ந்து பேசிய அவர் கங்கா வால்கா நாகரிகம் மூலம் இரு நாடுகளும் தத்தமது பெருமைகளை கண்டறிகின்றன. தொடர்ந்து இந்தியா மற்றும் ரஷ்யாவை குறிப்பிடும் பழைய இந்திப் பாடலை பிரதமர் மோடி பாடினார்.

தொடர்ந்து பேசிய மோடி, உலகில் வேறு எந்த நாடும் சென்றடைய முடியாத நிலவின் பகுதிக்கு சந்திரயானை வெற்றிகரமாக அனுப்பிய நாடு இந்தியா. டிஜிட்டல் பரிவர்த்தனையில் உலகுக்கு நம்பகமான மாதிரியை வழங்கும் நடாக இந்தியா உள்ளது. கடந்த 10 ஆண்டுகளில் இந்தியாவின் வளர்ச்சியை கண்டு உலகம் வியப்படைந்துள்ளது என மோடி கூறினார்.

The post சென்னை – ரஷ்யா இடையிலான கடல் வழி வர்த்தக தடத்தை உருவாக்கும் பணி நடைபெற்றுவருகிறது: ரஷ்யாவில் பிரதமர் மோடி பேச்சு appeared first on Dinakaran.

Tags : Chennai ,Russia ,PM Modi ,Moscow ,Modi ,Narendra Modi ,Anad ,
× RELATED உக்ரைன் போர் தொடர்பாக ரஷ்ய அதிபர் புதினுடன் பிரதமர் மோடி பேச்சுவார்த்தை!